Audacious Hope புத்தகம் ஒரு பார்வை | வாக்களிக்கும் முன் நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம்..!

நிகழ்கால பிம்பங்களே நம்மை அச்சமூட்டி எல்லாவற்றிருக்கும் தயார்செய்துவிட்டால், எதிர்காலத்தைப் பற்றிய பயம் அறவே இருக்காது.
Audacious Hope
Audacious HopeWestland Books
Not all battles are fought for victory. Some are fought simply to tell the world that someone was there on the battlefield
ராமன் மக்சேசாய் விருது வென்ற போது பத்திரிகையாளர் ரவிஷ் குமார் உதிர்த்த வார்த்தைகள் இவை.

உலகம் முழுக்கவே ஜனநாயகத்தின் குரல்வளை என்பது நாளுக்கு நாள் நசுக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படியானதொரு சூழலில் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை என்பது எப்படி உருவாகும்? . கடினமாக சூழல்களை கடந்து செல்ல நிச்சயம் ஒரு பிடிப்பு தேவை. ஆனால், இருண்டு போய் நம்பிக்கைகள் சூன்யமான ஒரு தேசத்தில் என்ன மிஞ்சியிருக்கும்? அப்படியானதொரு தேசத்தின் எதிர்காலம் குறித்து எத்தகைய நம்பிக்கையை ஒருவருக்குக் கொடுக்க இயலும்?

இந்திரஜித் ராய் எழுதிய audacious Hope என்னும் புத்தகம், இந்தியாவில் குறைந்து கொண்டிருக்கும் ஜனநாயகம் குறித்தும், எதிர்கால நம்பிக்கைகள் குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. கடந்த பிப்ரவரி மாதம்,  Samsung Galaxy Tab S9 Series நடத்திய ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. Westland இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், இந்திய ஜனநாயகத்தை பாஜக அரசு புல்டோசர் கொண்டு இடித்த பல விஷயங்கள் குறித்து அலசுகிறது இந்தப் புத்தகம். அதே சமயம், காங்கிரஸ் குறித்த பார்வையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது இருக்கும் சூழலில் , ராகுலை ஒரு மாற்றாக கருத முடியுமா என்கிற கேள்வியையும் முன்வைக்கிறது.

புத்தகத்தில் இருந்து

சுதந்திரம் அடைந்த நாள் தொட்டு நாம் சாதித்த பல ஜனநாயக வெற்றிகள் , பாஜகவின் ஆட்சிக் காலத்தில் சீழ்பிடிக்க ஆரம்பித்தன. விவசாயிகள், மாணவர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், உழைக்கும் வர்க்கத்தினர் என பலரும் இதற்கு எதிராக தொடர்ந்து போராடிவருகிறார்கள்.

பாஜக, மோடி
பாஜக, மோடிட்விட்டர்

2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்தியா ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிவிட்டதாக குற்றம் சாட்டுகிறார் இந்திரஜித் ராய். அதற்கான தரவுகளையும் முன்வைக்கிறார். 2014 - 19 பாஜக ஆட்சிக்காலத்தில் 26% பில்கள் மட்டுமே விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதற்கு முந்தைய இரு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் அது 60 சதவிகதமாகவும், 71 சதவிகதமாகவும் இருந்தன. RTIயின் அதிகாரங்கள் பெருமளவு குறைக்கப்பட்டன.

Audacious Hope
கச்சத்தீவு விவகாரம் | “பச்சைப் பொய் சொல்கிறார்” - வெளுத்து வாங்கிய PTR... அண்ணாமலையின் பதில் என்ன?

மனித உரிமை கமிஷனின் கரங்கள் புதிய விதிகள் உருவாக்கப்பட்டு வெட்டப்பட்டன. மத்திய அரசு குறித்த தன் நிலைப்பாட்டிற்காக சர்வதே அமைப்பான Amnesty International சிக்கலுக்கு உள்ளானது. அதற்கும் Amnesty International என்பது அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஒரு அமைப்பு. பாஜக ஆட்சி அமைத்த முதல் ஐந்து ஆண்டுகளில் academic freedomல் இந்தியாவின் மதிப்பு சொமாலியா, உக்ரைன், பாகிஸ்தானைவிட கீழே இறங்கியது. துருக்கி, பிரேசில் , இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் தான் ஒரு அரசுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனம் என்பது அரசுக்கு எதிரான விமர்சனமாக பார்க்கப்படாமல், விமர்சிப்பவர்களை மக்களின் எதிரிகளாக , பெரும்பான்மை மதத்தின் விரோதிகளாக மாற்றும் சூழல் உருவாக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என நாம் பல தசாப்தங்களாக பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இப்போது அதுவே கேள்விக்குறியாகியிருக்கிறது. 2021ம் ஆண்டு மார்ச் மாதன், Global thinktank Freedom House என்கிற அமைப்பு, இந்தியாவில் ஜனநாயகத்திற்கான அளவுகோளை Freeல் இருந்து Partly Free என கீழிறக்கியது. அடுத்த சில வாரங்களிலேயே , Varieties of Democracy Research Institute என்கிற அமைப்பு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக தேர்தல் நடைமுறைகளை பின்பற்றும் எதேச்சதிகார ஆட்சி நோக்கி நகர்வதாக குற்றம் சாட்டியது.

Audacious Hope
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முதியவர் கொடூர கொலை! இன்னும் எத்தனை பேர்? இது அசிங்கமில்லையா?

மாட்டுக்கறி வைத்திருப்பதும், பீஃப் சாப்பிடுவதும் இழிவான செயலாக பார்க்கப்பட்டது. 2015ம் ஆண்டிலிருந்து பலர் இந்த ஒரு காரணத்திற்காக தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். இத்தகைய தாக்குதலுக்கு உள்ளானவர்களில் இஸ்லாமியர்களும், தலித்களுமே அதிகம். 2015ம் ஆண்டு மொஹம்மது அக்லக் என்பவர் குளிர்சாதனப்பெட்டியில் பீஃப் வைத்திருந்ததாக சந்தேகிப்பட்டு கொல்லப்பட்டார்.

Audacious Hope
மாட்டிறைச்சி விற்றதாக இருவர் அரைநிர்வாணப்படுத்தி கொடுமை - சட்டீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சில மணி நேரங்களில் அது பீஃப் இல்லை ஆட்டிறைச்சி என்பது தெரிய வந்தது. மொஹம்மது அக்லக்கை கொன்றவர்கள் கஸ்டடி எடுக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன தெரியுமா?. தவறான காரணத்திற்காக ஒருவரை கொலை செய்ததுதான். அப்படியெனில் பீஃப் வைத்திருந்தால் ஒருவரை கொல்ல செய்ய முடியுமா?. அடுத்த ஆண்டு மீண்டு உனா கிராமத்தில் ஏழு தலித்துகள் பசு குண்டர்களால் தாக்கப்பட்டனர். ஆனால், இதெல்லாம் வெறும் ஐந்து ஆண்டுகளில் நடந்தவைதான்.

2019ல் மீண்டும் பாஜக வெற்றிபெற , இன்னும் இறங்கி அடிக்க ஆரம்பித்தார்கள். ஜம்மு & காஷ்மீர் இந்திய அரசு வழங்கிய ஆர்ட்டிக்கிள் 370 ரத்து செய்யப்பட்டது. மாநிலத்திலிருந்த பல்வேறு தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பாஜகவின் பரந்த இந்து தேசம் என்கிற கனவில் மேலும் எண்ணெய் ஊற்றியது அயோத்தியா தீர்ப்பு. 2019 நவம்பர் அயோத்தியா தீர்ப்பு எனில், அடுத்த மாதம் CAAவைக் கொண்டுவர மோடியின் அரசு தீர்மானித்தது. இப்படியாக அடுத்தடுத்த நடந்த பல விஷயங்கள் இந்தியானின் ஆன்மாவை அசைத்துப் பார்த்தது.

caa, sc
caa, scட்விட்டர்

லண்டனில் ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய அரங்கில்தான் இந்திரஜித் ராயும் இருந்திருக்கிறார். காங்கிரஸ் குறித்து அவரின் வாதம் இவ்வாறாக இருக்கிறது. "ஜனநாயகம் பெரும் சிக்கலில் இருக்கிறது; மைனாரிட்டிகள் பெரும் அச்சுறத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்; பொருளாதாரம் சீர்குலைந்து இருக்கிறது என பல விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி உரையாற்றினார்.

ஆனால், இவற்றில் இருந்தெல்லாம் இந்தியர்களை எப்படி மீட்பது என்பது குறித்து ராகுலிடம் தெளிவான பார்வை இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது என நாம் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும். அப்படியொரு நம்பிக்கையை நாம் பெறுவதற்கு, ஒரு மாற்று இருக்கிறதென நாம் தீர்க்கமாக நம்ப வேண்டும். மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்தியவின் சராசரி பொதுசனம் எத்தகைய துன்பங்களால் வதைபடுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ராகுல் காந்தி பாரத் ஜூடோ யாத்ரா என்னும் பெயரில் இந்தியா முழுக்க நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

Audacious Hope
காங்கிரஸின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? ராகுலை கடுமையாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர்!

ஆனால், அவற்றிற்கான தீர்வுகளை அவர் அப்போதே மக்கள் முன்னால் வைத்திருக்க வேண்டும். சீர்கெட்டுப்போயிருக்கும் ஜனநாயகத்தை எப்படி சரி செய்யப்போகிறார் என்பதை சொல்லியிருக்க வேண்டும். பொருளாதாரத்தை எப்படி மீட்கப்போகிறார் என பேசியிருக்க வேண்டும். நம்பிக்கை என்னும் ஒற்றைக் கயிறுக்காக ஒளி வேண்டி காத்திருக்கும் சாமான்யனுக்கு, அந்த நம்பிக்கையை ராகுல் தர மறுத்துவிட்டார்" என்கிறார் இந்திரஜித் ராய்.

எதிர்காலம் குறித்த நம்பிக்கைக்கு மகாபாரத மேற்கோளுடன் புத்தகத்தை முடிக்கிறார் இந்திரஜித் ராய். எப்படியும் தோற்றுவிடுவோம் என்பது அர்ஜூனன் அறிந்த ஒன்றுதான். போர் தொடங்கும் முன்னரே, அதை அர்ஜூனன் அறிவிக்க தயாராகவே இருந்தான். "அர்ஜூனன் இந்தப் போரில் வெற்றி அடைகிறானா அல்லது தோல்வி அடைகிறனா என்பது இங்கு பேசுபொருள் இல்லை. இங்கு நிகழும் அநீதிகள் கேள்வி கேட்கப்படாமல் சென்றுவிடக்கூடாது. அதற்காக அர்ஜூனன் சண்டையிட வேண்டும்." என கிருஷ்ணன் பதில் சொன்னாராம். இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் ஒன்றே இந்தியாவில் இருக்கும் லட்சகணக்கான மக்களை இங்கு நடக்கும் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்க வைக்கும்.

மகாபாரதம் என்ன சொன்னதோ நமக்குத் தெரியாது. வடசென்னையில் வெற்றிமாறன் சொல்வதும் இதுதான்.

ஜெய்க்கறமோ தோக்கறமோ முதல்ல சண்டை செய்யணும்.

இந்த சிஸ்டத்திற்கு எதிராக கேள்விகளை எழுப்புவது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. கொரோனா புண்ணியத்தில் Present is the new future எனச் சொல்லும் காலத்தில் இருக்கிறோம். நிகழ்கால பிம்பங்களே நம்மை அச்சமூட்டி எல்லாவற்றிருக்கும் தயார்செய்துவிட்டால், எதிர்காலத்தைப் பற்றிய பயம் அறவே இருக்காது. ஏனெனில், நாணல்கள் வளைய யோசிப்பதே இல்லை. நாம் நாணலாக எல்லாப் பக்கமும் சாயப் போகிறாமா அல்லது குறைந்தபட்ச அறத்துடன் கேள்விகளை எழுப்பப்போகிறமா என்பதில் இருக்கிறது எதிர்கால இந்தியாவுக்கான அச்சாணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com