காங்கிரஸின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? ராகுலை கடுமையாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தியை பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி
பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்திட்விட்டர்

ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த பிரசாந்த் கிஷோர்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலின் முதற்கட்டம் நெருங்கியுள்ளது. ஏப்ரல் 19ஆம் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வரும் நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தியை பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை. என்றாலும் அவர்தான் இப்போதும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். மற்றவர்கள் கட்சியை வழிநடத்த அவர் அனுமதிக்கவில்லை. நடைமுறையில் என்னென்ன வழிகள் இருக்கிறதோ, அதை எல்லாம் ராகுல் காந்தி முயற்சி செய்து பார்க்கிறார். ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளில் அவரால் கட்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்ல முடியவில்லை. மேலும் வேறு யாரையும் வழிநடத்தவும் அவர் விடவில்லை.

என்னைப் பொறுத்தவரை இது ஜனநாயக விரோதம். கடந்த 10 வருடமாக இந்த வேலையைச் செய்து வெற்றிபெறாமல் இருக்கும்போது அவர் ஓய்வெடுத்து எடுத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. 5 ஆண்டுகள் வேறு யாரிடமாவது பொறுப்பை ஒப்படைக்கலாம். இதனால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடாது.

இதையும் படிக்க: இந்திய தேசியக் கொடி அவமதிப்பு.. மீண்டும் சர்ச்சை பதிவு.. மன்னிப்பு கோரிய மாலத்தீவு Ex அமைச்சர்!

பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி
அமேதி To வயநாடு: பாஜகவைக் கண்டு பயமா? விமர்சிக்கும் கேரள சிபிஎம்; ராகுல் காந்தி தொகுதி மாறியது ஏன்?

’சொன்னைச் செய்யவில்லை ராகுல்’ - பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸை ஒரு கட்சியாக மட்டும் பார்க்கக் கூடாது. நாட்டில் அது பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியாது. காங்கிரஸ் அதன் வரலாற்றில் பலமுறை பரிணாம வளர்ச்சியடைந்து, மறுபிறவி எடுத்துள்ளது. ராஜீவ் காந்தி இறந்தபோது சோனியா காந்தி இதைச் செய்தார். தனக்கு எல்லாம் தெரியும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். உதவியின் தேவையை அவர் உணரவில்லை என்றால், யாரும் அவருக்கு உதவ முடியாது. தான் நினைப்பதைச் செய்யக்கூடிய ஒருவர் தேவை என்று அவர் நம்புகிறார். அது சாத்தியமில்லை. 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வி அடைந்தபோது கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், கட்சியை வேறு யாராவது வழி நடத்தட்டும் என்றும் அவர் எழுதினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஆனால் அவர் சொன்னதுக்கு மாறாக நடந்துவருகிறார். தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும் முக்கிய முடிவுகள் எடுப்பதில் ராகுல்தான் இப்போதும் இறுதியானவர். ஒரு தொகுதி தொடர்பான முடிவுகளுக்குக்கூட ராகுல் காந்தியின் ஒப்புதல் தேவை என்பதை பல தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்வார்கள். எந்த ஒரு தனிநபரையும்விட காங்கிரஸும், அதன் ஆதரவாளர்களும் பெரியவர்கள் என்பதால் கட்சி தலைமைக்கு வழிவிடுவதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக் கூடாது.

இதையும் படிக்க: இந்திய தேர்தலை சீர்குலைக்க சதி? சீனா போடும் திட்டம்.. மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை!

பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி
வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்.. பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

’காங்கிரஸின் கட்டமைப்பிலேயே குறைகள் உள்ளன’!

தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் போன்ற அமைப்புகள் சமரசம் செய்துகொண்டதால்தான் தனது கட்சி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது என்று ராகுல் காந்தி கூறுவது உண்மையல்ல. 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. ஆனால் அப்போதே 206 இடங்களில் இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பிலேயே குறைபாடுகள் இருக்கிறது. அதைச் சரிசெய்வது வெற்றிக்கு அவசியம்.

சோனியா, ராகுல் காந்தி
சோனியா, ராகுல் காந்தி file image

காங்கிரஸில் இப்போது சிக்கல் என்பது தனிப்பட்ட நபர்களால் வருவது அல்ல. அது கட்சியின் கட்டமைப்பில் இருக்கும் சிக்கல். மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தாலும் கட்சியை நான்தான் அதில் இருந்து மீட்பேன் என்று ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக் கூடாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால் ராகுல் காந்தி ஒதுங்கி வழிவிட வேண்டும்” என காட்டமாக அதெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி தேர்வெழுத அனுமதி மறுப்பு... தனியார் பள்ளியின் அதிர்ச்சி செயல்!

பிரசாந்த் கிஷோர், ராகுல் காந்தி
“EVM, மேட்ச் பிக்சிங், சமூக வலைதளங்கள் இல்லையென்றால் பாஜக வெற்றிபெறாது” - ராகுல் காந்தி காட்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com