கச்சத்தீவு விவகாரம் | “பச்சைப் பொய் சொல்கிறார்” - வெளுத்து வாங்கிய PTR... அண்ணாமலையின் பதில் என்ன?

கச்சத்தீவு விவகாரத்தில் பச்சைப்பொய் சொல்கின்றனர் என அமைச்சர் பி.டி.ஆர். கூறிய நிலையில், அதற்கு பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
அமைச்சர் பி.டி.ஆர் - அண்ணாமலை
அமைச்சர் பி.டி.ஆர் - அண்ணாமலைமுகநூல்

I.N.D.I.A. கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக மதுரை நேதாஜி ரோடு, ஜான்சி ராணி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்pt web

அப்போது பேசிய அவர், “இந்த நாடாளுமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை. தமிழகம் பழைய தவறான பாதையை விட்டு தற்போது முன்னேறி உள்ளது.

நாம் கொடுக்கும் 1 ரூபாய்க்கு 35 பைசா வரியை கொடுத்ததை நிறுத்தி 29 பைசா கொடுப்பதை நாடாளுமன்றத்தில் பெருமையாக பேசுகிறார்கள். பேரிடரின் போது உதவி கேட்டோம்.. அப்போதும் ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. நமக்கு கடன்கொடுப்போரையும் தடுத்துள்ளனர்.

அமைச்சர் பி.டி.ஆர் - அண்ணாமலை
“கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?” - பிரதமர் மோடிக்கு கேள்விகளை அடுக்கிய அமைச்சர் உதயநிதி!

ஆனால் தமிழக வரிப்பணத்தை சுருட்டி வைத்துக்கொண்டுள்ளனர். நிதி கேட்டால் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்கிறார்கள். மாநிலப்பட்டியலில் உள்ள கல்வி உரிமை நிதி உரிமையை பறித்துள்ளனர். கொடூரமான ஆளுநரை, சட்டமன்றத்தில் கொடுத்துள்ளனர். அதிலும் படிக்கத் திறனற்ற ஆளுநரை பொறுப்பில் வைத்துள்ளனர்.

இதையெல்லாம் மறைப்பதற்காக கச்சத்தீவு விவகாரம் குறித்து இப்போது பேசுகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு உள்ள கச்சத்தீவு பிரச்னை குறித்து, அதுவும் 7 வருடத்திற்கு முன்பு கொடுத்த ஆர்டிஐ-ஐ வைத்துக்கொண்டு... 4 நாளில் கொடுக்கப்பட்ட ஆர்டிஐ என முரண்கொண்ட பச்சைப்பொய்யை சொல்லி புரளியை கிளப்பப் பார்க்கிறார்கள். அனைத்தையும் திசைதிருப்ப பார்க்கின்றனர்.

முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

படித்தவர்கள் நிறைந்த மாநிலத்தில் பொய்யை பரப்பி டூபாக்கூர் வேலை பார்க்க முயல்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு உயிரா சாவா என்ற அடிப்படையிலான தேர்தலாக உள்ளது.

அமைச்சர் பி.டி.ஆர் - அண்ணாமலை
“கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா எதுவும் பேசவில்லை”- இலங்கை அமைச்சர் தொண்டமான்

பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதா என்பதை போல பாஜக பற்றி மக்கள் யோசிக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இரண்டு மாநில முதல்வர்களை கைது செய்து, எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கை முடக்கி சமமான தேர்தலை சந்திக்க முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர்” என்றார் காட்டமாக.

இந்நிலையில், பி.டி.ஆர்-ன் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை
அண்ணாமலைpt web

அதில் “கச்சத்தீவு தொடர்பான ஆர்டிஐ தகவலை பச்சைப்பொய் என சொல்பவர்கள் அதுபற்றி என்னோடு விவாதிக்க தயாரா? ஆர்டிஐ விவகாரத்தில் திமுகவின் பதில்தான் வேடிக்கையாக உள்ளது.

உரிய அதிகாரிகளிடம் இருந்து உரிய ஆதாரங்களை ஆர்டிஐ மூலம் நான் பெற்றுள்ளேன். கருணாநிதி ஆதரிக்கவில்லை என்று கூறுவதற்கு பதிலாக ஆவணங்களை யார் கொடுத்தது என கேட்பது சரியா?” என்று கூறி, விவாதத்து அழைத்து சவால் விடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com