Patented medicines will face a 100% tariff entering the US
trumpAI

இந்தியாவுக்கு பேரிழப்பா..? டிரம்பின் அடுத்த அறிவிப்பு! நிபுணர்கள் சொல்வது என்ன.?

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரியால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Published on
Summary

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிவிதிப்பில் மீண்டும் கடுமையான மாற்றங்களை அறிவித்துள்ள நிலையில், இந்தியா மீது அதன் தாக்கம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. முன்பு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக இந்தியா ஏற்றுமதிக்கு 50% வரை வரி விதித்த அமெரிக்கா, தற்போது காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு 100% வரி அறிவித்துள்ளது. இதனால் இந்திய மருந்து ஏற்றுமதிக்கு உடனடி பெரிய பாதிப்பு இல்லை என நிபுணர்கள் விளக்குகின்றனர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதும் வரிவிதிப்பில் தலைகீழ் மாற்றத்தை கொண்டுவந்தார். இந்தியா அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது என்று கூறி, இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதித்திருந்தார் டிரம்ப். இதற்கு ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதை முக்கிய காரணமாகவும் குறிப்பிட்டிருந்தார்.

medicine
medicine web

மேலும், விரைவில் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்துக்கு வரவில்லை என்றால் இந்தியா மீதான வரி அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்க வரிவிதிப்பின் காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆடை, இறால், ஆபரண நகைகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுவது கடுமையாக பாதிக்கப்பட்டது.

Patented medicines will face a 100% tariff entering the US
கொன்று குவிக்கப்பட்ட ஈரானிய தலைவர்கள்.. ஆதாரத்தோடு பகிர்ந்த அதிபர் ட்ரம்ப்!

பின்னர் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதால், இந்தியா மீதான அடிப்படை வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்கள் மீது 100% வரி விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

medicine
medicine web

வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை வாங்குவதைக் குறைத்து, அமெரிக்காவிலேயே மருந்துகளை உற்பத்தி செய்ய நிறுவனங்களை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாக கூறப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு ஜூலை 31ம் தேதியும், மற்ற நிறுவனங்களுக்கு செப்டம்பர் 29-ம் தேதியும் இந்த வரி அமலுக்கு வருகிறது.

Patented medicines will face a 100% tariff entering the US
குறைந்த செலவு.. அதிக தாக்கம்.. தொடர்ந்து நிலைகுலையும் அமெரிக்கா? ஆட்டிப்படைக்கும் ஈரான்!

இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் சுமார் 34% முதல் 38% வரை அமெரிக்காவிற்கு செல்லும் நிலையில், இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு காப்புரிமை பெற்ற பிராண்டட் மருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் இதனால் தற்போதைக்கு இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்தியா ஜெனரிக் வகை மருந்துகளையே அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Patented medicines will face a 100% tariff entering the US
US-இன் 2 விமானங்களை ஒரேநாளில் தகர்த்தது எப்படி? யாருக்கும் தெரியாத ஈரானின் ராணுவ ரகசியம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com