பாஜகவின் பக்கா ஸ்கெட்ச்.. சந்தேஷ்காலியில் போராட்டத்தில் ஈடுபட்ட ’ரேகா பத்ரா’-க்கு சீட்.. யார் இவர்?

மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காலியில் பாஜக சார்பில் சீட் வழங்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ரேகா பத்ரா
ரேகா பத்ராட்விட்டர்

மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல்

கடந்த காலங்களில் ஊடகங்களில் அதிகளவு பேசப்பட்ட செய்திகளில், மேற்கு வங்க சந்தேஷ்காலியும் ஒன்று. தற்போதும் அதுகுறித்த செய்திகள் வந்தபடியே உள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியிருக்கும் நிலையில், அது தற்போது மேலும் எதிரொலித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது, சந்தேஷ்காலி கிராமம். இங்கு இந்துக்கள் மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். மேலும், பழங்குடி சமூகத்தினரும் கணிசமான அளவில் உள்ளனர். இங்கு, கிட்டத்தட்ட 35 சதவிகித வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள பாசிர்ஹட் மக்களவைத் தொகுதியில் இக்கிராமமும் அடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதையும் படிக்க: மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை.. லோக்பால் ஆணைய உத்தரவால் நடவடிக்கை!

ரேகா பத்ரா
சந்தேஷ்காலி விவகாரம்: மம்தாவைக் கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

சந்தேஷ்காலி விவகாரத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்த பெண்ணுக்கு பாஜக சீட்!

இந்த நிலையில்தான், பாசிர்ஹட் தொகுதிக்கு பாஜக சார்பில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும், அக்கட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த ரேகா பத்ரா என்ற பெண் களமிறக்கப்பட்டு உள்ளார். “நான் எப்போதும் சந்தேஷ்காலி பெண்களுக்கு ஆதரவாக நின்று அவர்களுக்காகப் போராடுவேன். நான் அவர்களின் குரலாக இருப்பேன்” எனச் சொல்லும் ரேகா பத்ராவுக்கு, கட்சியும் துணை நிற்பதாக உறுதியளித்துள்ளது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் கிராம மக்களுக்கு இடையே எதிர்ப்பும் கிளம்பியிருப்பதுதான் தற்போதைய தகவல். ரேகா பத்ராவுக்கு எதிராகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் எப்போதும் சந்தேஷ்காலி பெண்களுக்கு ஆதரவாக நின்று அவர்களுக்காகப் போராடுவேன். நான் அவர்களின் குரலாக இருப்பேன்

எங்களில் இருந்து அநீதிக்கு எதிராகப் பேசிய ஒரு பெண் எங்களை வழிநடத்துவார் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்

இந்தச் செயலை திரிணாமுல் காங்கிரஸ்தான் செய்திக்க வேண்டும் என பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திரிணாமுல் நிராகரித்துள்ளது. ரேகா பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிா்ப்புகள் எழுந்த நிலையில், அப்பகுதி பெண்கள் ரேகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். ”எங்களில் இருந்து அநீதிக்கு எதிராகப் பேசிய ஒரு பெண் எங்களை வழிநடத்துவார் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் சந்தேஷ்காலி ஒரு முக்கிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ரேகா பத்ராவுக்கு பாஜக சீட் வழங்கியிருப்பது ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்குப் பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ரேகா பத்ரா மூலம் அப்பகுதி மக்களின் வாக்குகளை பாஜக இந்த முறை அறுவடை செய்யும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ரோகித் Vs ஹர்திக்! அசிங்கப்படுவது யார்? சென்னை அணியை பார்த்தும் திருந்தாத மும்பைஅணி! யார் மீது தவறு?

ரேகா பத்ரா
சந்தேஷ்காலி விவகாரம்: முக்கிய நபர் கைது.. கொண்டாடிய பெண்கள்.. மம்தா கட்சி எடுத்த அதிரடி முடிவு!

பாஜக சீட் வழங்கிய ரேகா பத்ரா யார்?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறியப்பட்ட (தற்போது கட்சியிலிருந்து நீக்கம்) ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது உதவியாளர்களால் சித்திரவதைக்கு ஆளானதாக கூறப்படுபவர்களில் ரேகா பத்ராவும் ஒருவர். இதைத் தொடர்ந்து சந்தேஷ்காலி விவகாரத்தில் திரிணாமுல் தலைவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தார் பத்ரா. அவரது புகாரின் அடிப்படையில் ஷாஜஹான் ஷேக்கின் கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் கடந்த மாா்ச் 6ஆம் தேதி நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா். அப்போது, சந்தேஷ்காலியைச் சோ்ந்த பெண்களை பிரதமா் மோடி சந்தித்தாா். அந்தப் பெண்கள் குழுவில் ரேகாவும் இடம்பெற்றிருந்தார். அப்போது, அப்பகுதி பெண்களின் பிரச்னைகளை பிரதமரிடம் அவா் எடுத்துரைத்தாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில்தான் அவருக்கு தற்போது பாஜக சார்பில் சீட் வழங்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: குஜராத்: காங்கிரஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்.. காரணம் என்ன?

ரேகா பத்ரா
சந்தேஷ்காலியில் ஆளுநர் போஸ்; மம்தா அரசுக்கு எதிராக புயலை கிளப்பும் பாலியல் வன்கொடுமை புகார்!

சந்தேஷ்காலியில் நடந்தது என்ன?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முகமாக அறியப்பட்ட ஷாஜகான் ஷேக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையை அம்மாநில ஆளுநர் முதல் பாஜக வரை கையில் எடுக்க, ஆளும் மம்தா பானர்ஜிக்கு இது பெரும் தலைவலியைக் கொடுத்தது. மேலும், இந்த விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஷாஜகான், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அவரை கட்சியிலிருந்தும் திரிணாமுல் காங்கிரஸ் நீக்கியது. முன்னதாக, இவரது வீட்டுக்கு கடந்த ஜனவரி 5ஆம் தேதி சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளை ஷாஜகான் ஷேக்கின் ஆதரவாளர்கள் வழிமறித்து தாக்கினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஷாஜகான் ஷேக் தலைமறைவானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: MIvsGT|மைதானத்திற்குள் திடீரென ஓடிவந்த நாய்..’ஹர்திக்’ ’ஹர்திக்’ கத்திய ரோகித் ஃபேன்ஸ்! வைரல் வீடியோ

ரேகா பத்ரா
வேட்பாளர் விவகாரம்: உறவை முறித்த மம்தா பானர்ஜி.. உடனே Sorry கேட்டு சரணடைந்த சகோதரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com