தலைப்புச் செய்திகள் | முல்லை பெரியாறில் புதிய அணைக்கு எழும் எதிர்ப்பு முதல் IPL இறுதிப்போட்டி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, முல்லை பெரியாறில் புதிய அணைக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல் 2024 ஐபிஎல் கோப்பையை ஏந்தபோவது யார் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இந்நிலையில், குமுளியில் நாளை முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

  • மேற்குவங்கம் அருகே இன்றிரவு கரையை கடக்கிறது ரெமல் புயல். இதன் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் 21 மணி நேரத்திற்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புயல்
புயல்pt web
  • குஜராத்தில் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 சிறார்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு. இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
குஜராத்தை உலுக்கிய தீ விபத்து.. உயிரிழப்பு 27ஆக அதிகரிப்பு
  • குஜராத் தீ விபத்து தொடர்பாக விளையாட்டு மையத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆறாம் கட்ட தேர்தலில் உத்தேசமாக 61.20 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 79.47 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மதவாத தலைவர் போல சித்தரிக்க முயற்சிப்பதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • மன்னனாக இருந்த பிரதமர் மோடி தற்போது தெய்வக் குழந்தையாக மாறிவிட்டார் என விசிக சார்பில் நடந்த விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
’மன்னனாக இருந்த பிரதமர் மோடி தற்போது தெய்வக் குழந்தையாக மாறிவிட்டார்’ - நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு
  • மத்தியப்பிரதேசத்தில் திரைப்பட பாணியில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஓடும் லாரியில் பொருட்கள் கொள்ளை அடிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது

  • 2024 ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தப்போவது யார்?. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

  • கான் திரைப்பட விழாவில் 'All we imagine as light' என்ற இந்திய படத்துக்கு விருது. 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்ற முதல் இந்திய இயக்குநரானார் பாயல் கபாடியா.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
Cannes 2024 | பாயல் கபாடியா | 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்ற முதல் இந்திய இயக்குநர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com