Cannes 2024 | பாயல் கபாடியா | 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்ற முதல் இந்திய இயக்குநர்!

கான் திரைப்பட விழாவில் 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற சாதனையை பாயல் கபாடியா படைத்துள்ளார்.
 பாயல் கபாடியா
பாயல் கபாடியா pt web

ஆவணப்பட இயக்குநரான பாயல் கபாடியா இயக்கியுள்ள "ALL WE IMAGINE IS LIGHT" திரைப்படம், கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கான் விழாவில் போட்டியிடும் முதல் இந்திய படம் இதுவாகும்.

ALL WE IMAGINE IS LIGHT
ALL WE IMAGINE IS LIGHT

இப்படத்தில் கனி கஸ்ருதி, திவ்ய பிரபா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்காக பாயல் கபாடியா கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளார்.

Payal Kapadia wins Grand Prix award
Payal Kapadia wins Grand Prix award

பாம்டி’ஓருக்கு பிறகு இரண்டாவது மதிப்புமிக்க விருதான கிராண்ட் பிரிக்ஸை வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையை கபாடியா பெற்றுள்ளார்.

 பாயல் கபாடியா
கார்த்திக் குமார் குறித்து பேச பாடகி சுசித்ராவுக்கு இடைக்கால தடை

இதற்கு முன்பு கபாடியா இயக்கிய "A NIGHT OF KNOWING NOTHING" என்ற ஆவணப்படம் 2021-ஆம் ஆண்டு கான் விழாவில் "கோல்டன் ஐ" விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com