’மன்னனாக இருந்த பிரதமர் மோடி தற்போது தெய்வக் குழந்தையாக மாறிவிட்டார்’ - நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு

மன்னனாக இருந்த பிரதமர் மோடி தற்போது தெய்வக் குழந்தையாக மாறிவிட்டதாக நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ்புதிய தலைமுறை

மன்னனாக இருந்த பிரதமர் மோடி தற்போது தெய்வக் குழந்தையாக மாறிவிட்டதாக நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ் ராஜுக்கு வழங்கப்பட்டது பெரியார் ஒளி விருது அருள்மொழிக்கும், 'காமராஜர் கதிர்' விருது எஸ்றா சற்குணத்திற்கும் வழங்கப்பட்டது. மார்க்ஸ் மாமணி விருதை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ”ஒரு கலைஞன் கோழையானால், சமுதாயமும் கோழையாகிவிடும். ஒரு கலைஞனும், பத்திரிகையாளனும் எப்போதும் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும். மேஎலும், நான் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உடம்புக்கு காயமானால் சும்மா இருந்தாலும் அது ஆறிவிடும், ஆனால், ஒரு நாட்டுக்கு காயமானால் நாம் பேசாமல் இருந்தால் அது அதிகமாகிவிடும். மன்னனாக இருந்த பிரதமர் மோடி தற்போது தெய்வக் குழந்தையாக மாறிவிட்டார்.” என தெரிவித்தார்.

நடிகர் பிரகாஷ்ராஜ்
பெங்களூரு பண்ணை வீட்டில் நடந்த போதைப்பொருள் விருந்து... சிக்கிய நடிகர், நடிகைகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com