ட்ரம்ப், தூய்மை பணியாளர்கள் கைது
ட்ரம்ப், தூய்மை பணியாளர்கள் கைதுpt web

HEADLINES : நள்ளிரவில் கைதான தூய்மை பணியாளர்கள் முதல் ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை வரை

இன்றைய தலைப்புச் செய்திகளில் நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டது முதல் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் எச்சரிக்கை வரைப் பார்க்கலாம்.
Published on

சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்... அனுமதி இல்லாத இடத்தில் போராட்டத்தை தொடர்ந்ததால் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக நள்ளிரவில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஆயிரம் பேரை காவல் துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டு பேருந்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேளச்சேரி 100 அடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தூய்மை பணியாளர்கள் கைது எதிரொலியாக காவல் துறையின் கண்காணிப்பு வளையத்தில் சென்னை மாநகரம்... வடசென்னை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து...

அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... வரி நெருக்கடி விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்துப் பேச வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது...

இறந்தவர்களோடு தேநீர் அருந்தும் வாய்ப்பை அளித்த தேர்தல் ஆணையத்து நன்றி என ராகுல் காந்தி கிண்டல்... இறந்ததாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோரை சந்தித்ததாக பதிவு...

ட்ரம்ப், தூய்மை பணியாளர்கள் கைது
’சோகம் இழையும் கண்கள்..’ மாஸ், ஸ்டைல் மட்டுமல்ல.. ரஜினியின் எமோஷனல் காட்சிகளும் தனி ரகமே!

திமுகவின் பாக முகவர்கள் அமைப்பை வலுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும்.... பிஹார் வாக்காளர் பட்டியல் சர்ச்சையை சுட்டிக்காட்டி மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...

வாக்குகளை பெறுவதற்காக திமுக அரசு சிறுபான்மையின மக்களை ஏமாற்றுகிறது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சனம் செய்திருக்கிறார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிfb

சுதந்திர தினத்தன்று ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது. தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஆணை, பரிந்துரையை இந்தியில் வெளியிட வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில்வே அலுவலகப் பணிகளில் இந்தி பயன்படுத்துவதை உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தல்...

நெல்லை கவின் படுகொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கவினை கொலை செய்ய சுர்ஜித்திற்கு உதவிய குற்றச்சாட்டில் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை....

ட்ரம்ப், தூய்மை பணியாளர்கள் கைது
”இந்தியாவில் இப்படி கொத்து கொத்தாக கொ*லைகள் நடக்குமா..?” தெருநாய்களுக்காக கதறி அழுத நடிகை சதா!

டெல்லியில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு... உச்ச நீதிமன்றத்தின் விரிவான அமர்வில் இன்று விசாரணை...

தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து வேதனை... நாய்களை காக்க வேண்டும் என கண்ணீர் மல்க நடிகை சதா வேண்டுகோள்...

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்... ரஷ்ய அதிபர் புடினுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை.

ட்ரம்ப், தூய்மை பணியாளர்கள் கைது
’இறந்தவர்களோடு தேநீர் அருந்த வாய்ப்பளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி..’ ராகுல் காந்தி கிண்டல் பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com