தெருநாய்களுக்காக கண்ணீர் விட்ட நடிகை சதா
தெருநாய்களுக்காக கண்ணீர் விட்ட நடிகை சதாweb

”இந்தியாவில் இப்படி கொத்து கொத்தாக கொ*லைகள் நடக்குமா..?” தெருநாய்களுக்காக கதறி அழுத நடிகை சதா!

தலைநகர் டெல்லியில் உள்ள நாய்களை பிடித்து அவற்றை காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து நடிகை சதா வெளியிட்டு வீடியோ வைரலாகி வருகிறது.
Published on

நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் தெரு நாய் தாக்குதல் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது வழக்கு விசாரணையில் பேசிய நீதிபதிகள், இனி டெல்லியின் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு தெருநாய்களை கூட பார்க்க முடியாத சூழலை உண்டாக்க வேண்டும் என கூறினர். மேலும் தெருநாய்கள் அனைத்தும் பிடிக்கப்பட்டு காப்பகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும், இந்த உத்தரவை மதிக்க தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். 

தெருநாய்கள் காப்பகத்தை அதிகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தெருநாய்கள் காப்பகத்தை அதிகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவுweb

அதுமட்டுமில்லாமல் 5 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்ததோடு, விலங்குகள் நல ஆர்வலர்களால் இறந்தவர்கள் உயிர்களை கொடுக்க முடியுமா எனவும் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கண்டித்து நடிகை சதா கண்ணீருடன் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெருநாய்களுக்காக கண்ணீர் விட்ட நடிகை சதா
’தெருநாய் கடியால் ஒருவர் கூட பாதிக்கப்பட கூடாது..’ - 5 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

3 லட்சம் உயிர்களின் நிலைமை.. இதற்கு நாடே வெட்கப்படவேண்டும்!

தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது, காப்பகங்களில் அடைப்பது போன்றவற்றை கண்டித்து அழுதுகொண்டே வீடியோவில் பேசியிருக்கும் நடிகையும், WildLife புகைப்பட விரும்பியுமான சதா, “8 வார காலம் என்ற குறுகிய காலத்தில் தெருநாய்கள் அனைத்தையும் கருத்தடை செய்து தடுப்பூசி போடுவது சாத்தியமற்றது.

அரசாங்கமும் உள்ளாட்சி அமைப்புகளும் பட்ஜெட் இருந்தபோதிலும், விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்தத் தவறிவிட்டன. அந்த அலட்சியத்திற்கு, தெருநாய்கள்தான் தண்டனையை பெறப்போகின்றன.

தெருநாய்கள்
தெருநாய்கள்

இத்தனை வருடங்களில் முறையாக பட்ஜெட் ஒதுக்கி இது நடைமுறை படுத்தப்பட்டிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது. பல விலங்கு நல ஆர்வல அமைப்புகள் இந்த விலங்குகளை பாதுகாக்க தங்களது சொந்த பணத்தை செலவு செய்து வருகிறார்கள். அவற்றுக்கு உணவளிக்கவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் அவர்கள் தங்கள் பணத்தை செலவு செய்கிறார்கள். நானும் இதை செய்து வருகிறேன்.  எந்த அரசு உதவியும் எங்களுக்கு கிடைப்பதில்லை.

அதேபோல் வளர்ப்பு நாய்களை வாங்கி வளர்ப்பவர்கள் இந்த அப்பாவி நாய்கள் கொல்லப்படுவதில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு வளர்ப்பு நாயை வாங்குபோதும் தெருவில் இருக்கும் ஒரு நாய் அல்லது பூனையின் வாழ்வதற்கான உரிமை பறிபோகிறது. உங்கள் வீட்டில் பார்ப்பதற்கு அழகான ஒரு நாய் இருக்க வேண்டும் என்கிற பேராசையால் இந்த நாய்கள் தெருவில் கிடக்கின்றன. அப்படி செய்தவர்களெல்லாம் உங்களை நீங்கள் விலங்கு நல ஆர்வலர் என சொல்லிக் கொள்ளாதீர்கள்.

இந்தியா போன்றொரு நாட்டில் கொத்துக் கொத்தாக இப்படி கொ*லைகள் நடக்கும் என நான் நினைக்கவே இல்லை.

இந்த நடவடிக்கைக்காக நாடு வெட்கப்பட வேண்டும், இந்த முடிவை யோசிக்காமல் எடுத்தவர்கள் வெட்கப்படவேண்டும். முடிவெடுக்கும் முன்பு எப்படி சூழலை சரிசெய்வது என தன்னார்வ அமைப்புகளிடமும், விலங்கு நல ஆர்வலர்களிடமும் ஆலோசனையாவது செய்திருக்க வேண்டும்.

அந்த உத்தரவை நீதிமன்றம் திரும்பப்பெற வேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தெருநாய்களுக்காக கண்ணீர் விட்ட நடிகை சதா
சென்னை | இரண்டரை வயது குழந்தையை கடித்த தெருநாய்... ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு சிகிச்சை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com