தலைப்புச் செய்திகள் : PAN CARD 2.O முதல் மீண்டும் தேர்தல் கோரும் உத்தவ் தாக்கரே வரை!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை எதிரொலியால் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
“பாமக நிறுவனர் ராமதாஸூக்கு வேறு வேலையில்லாததால் தினமும் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்” என அதானியை சந்தித்து அமைச்சர் பேசியதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது பற்றிய கேள்விக்கு முதலமைச்சர் பதில்...
ராமதாஸ் குறித்த பேச்சுக்கு முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். “மன்னிப்பு கேட்கும் பழக்கம் தங்களுக்கு இல்லை” என அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக களஆய்வுக்கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. தங்களைப் பேச அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தள்ளுமுள்ளு.
“கருத்து மோதல் இருந்தால்தான் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம்” அதிமுக கூட்டங்களில் நடைபெற்ற மோதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்.
கடும் அமளிக்கிடையே தொடங்கியது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்... அதானி ஊழல் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளால் இரு அவைகளும் ஒத்திவைப்பு...
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் ஏலத்தில் விலைக்கு வாங்கப்பட்ட 13 வயதே ஆன பீகார் சிறுவன்... வைபவ் சூர்யவன்சியை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் அணி.
விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 70க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்... அனைவரையும் சால்வை அணித்து வரவேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமக்கு தந்தையை போன்றவர் என அவருடன் பணியாற்றிய மோகினி டே விளக்கம் அளித்துள்ளார்.
கியூ ஆர் கோட் (QR CODE) வசதியுடன் புதிய பான் கார்டுகள் பொதுமக்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில், பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
ஏழை நாடாக கருதப்படும் சூடானுடன் பீகாரை ஒப்பிட்ட ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரஷாந்த் கிஷோர்... தான் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை வாபஸ் பெறுவோம் எனவும் அமெரிக்க வாழ் பீகார் மக்களிடம் பேச்சு...
அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75ஆவது ஆண்டுவிழா... பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு..
யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அதானி குழுமம் அளித்த தொகையை நிராகரித்தது தெலங்கானா அரசு... 100 கோடி ரூபாய்யை நிராகரிப்பதாக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு...
அதானி குழுமத்தில் செய்யும் முதலீட்டை நிறுத்தி வைத்த பிரான்ஸ் எரிபொருள் நிறுவனம்.. கவுதம் அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடவடிக்கை..
நடப்பு ஆண்டில் 15 பொருட்களின் விற்பனையை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்... ஐபோன் 13, எம்2 மேக் மினி, எம்3 ஐமேக், மேக்புக் ஏர் எம்1 விற்பனை இல்லை என அறிவிப்பு...
மகாராஷ்டிராவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி வலியுறுத்தல்... மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்...