முதல்வரின் தனி உதவியாளர் தாக்கியதாக ஆம் ஆத்மியின் ஸ்வாதி மாலிவால் புகார் - டெல்லி அரசியலில் பரபரப்பு

ஸ்வாதி மாலிவால் புகார் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்வாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்
ஸ்வாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்ட்விட்டர்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்குத் தாம் சென்றிருந்ததாகவும், அப்போது இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்த தனி உதவியாளரான விபவ் குமார் தன்னை தாக்கியதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மாலிவால், டெல்லி காவல்துறைக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்திருந்தார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதல்வரின் இல்லமோ, ஆம் ஆத்மி கட்சியோ உடனடி எதிர்வினை எதுவும் தெரிவிக்கவில்லை.

அதேநேரத்தில், ஸ்வாதி மாலிவால் எழுத்துப்பூர்வமாகப் புகார் தெரிவிக்கவில்லை எனவும், நெறிமுறைகளின்படி, டெல்லி காவல்துறையின் முன் அனுமதியின்றி முதல்வர் வீட்டிற்குள் நுழைய முடியாது. தற்போது பிசிஆர் அழைப்பின் நம்பகத்தன்மை குறித்தும், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: “எப்போது விசாரணையை தொடங்குவீர்கள்..? சீக்கிரம் சிபிஐ, ED அனுப்புங்கள்” - ராகுல்காந்தி

ஸ்வாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்
முதல்வர் கெஜ்ரிவாலின் இல்லத்தில் தாக்கப்பட்டாரா சுவாதி மாலிவால்? டெல்லி காவல்துறையிடம் புகார்

மேலும், இந்தப் புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், ஸ்வாதி மாலிவால் புகார் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலின் புகார் முதல்வர் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! எங்கே?

ஸ்வாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்
'குஷ்புவை போலவே எனக்கும் அந்த கொடுமை நடந்தது' - தந்தை மீது ஸ்வாதி மாலிவால் பாலியல் புகார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com