“எப்போது விசாரணையை தொடங்குவீர்கள்..? சீக்கிரம் சிபிஐ, ED அனுப்புங்கள்” - ராகுல்காந்தி

”அதானியும் அம்பானியும் கறுப்புப் பணம் தருகிறார்கள் என்று ஐந்து ஆறு நாட்களுக்கு முன்பே சொல்லியுள்ளீர்கள். இதற்கான விசாரணையை எப்போது தொடங்குவீர்கள்? சிபிஐ இடியை அனுப்புங்கள்" ராகுல்காந்தி
ராகுல் காந்தி
ராகுல் காந்திpt web

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். இரண்டு பிரதான தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

pm modi, rahul gandhi
pm modi, rahul gandhipt web

கடந்த சில தினங்கள் முன் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “பல ஆண்டுகளாக காங்கிரஸின் இளவரசர் அதான் அம்பானி பற்றி பேசுவார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் அதானி அம்பானி பற்றி பேசுவதில்லை. ஏன்? அதானி அம்பானியிடம் எவ்வளவு கருப்புப் பணம் பெற்றீர்கள் என்பதை அறிவிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் இளவசரிடம் கேட்க விரும்புகிறேன்" என தெரிவித்திருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் அப்போதே தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் பவன்கோரா, “பிரதமர் ஜி உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ஏப்ரல் 3 முதல் மே 8 ஆம் தேதி வரை ராகுல் காந்தி, அதானியைப் பற்றி 103 முறையும், அம்பானியைப் பற்றி 30 முறையும் பேசியுள்ளார்” என தெரிவித்திருந்தார்.

rahul gandhi
rahul gandhipt web

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் காந்தி, தனது எக்ஸ் தளத்தில், “இன்று நான் லக்னோ விமான நிலையத்தில் இருந்தேன். இங்கிருந்து மும்பை, கவுகாத்தியில் இருந்து அகமதாபாத் வரை அனைத்து விமான நிலையங்களையும் பிரதமர் தனது 'டெம்போ நண்பரிடம்' ஒப்படைத்துள்ளார். நாட்டின் சொத்து எவ்வளவுக்கு விற்கப்பட்டது என்பதை நரேந்திர மோடி பொதுமக்களிடம் சொல்வாரா?” என எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

வீடியோவில் பேசி இருந்த அவர், “2020 மற்றும் 2021க்கு இடையில் இதுபோன்று வரி செலுத்துவோர் பணத்தில் கட்டப்பட்ட விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு கவுதம் அதானியிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கு எத்தனை டெம்போக்கள் பிடித்தது?

அதானியும் அம்பானியும் கறுப்புப் பணம் தருகிறார்கள் என்று ஐந்து ஆறு நாட்களுக்கு முன்பே சொல்லியுள்ளீர்கள். இதற்கான விசாரணையை எப்போது தொடங்குவீர்கள். சிபிஐ இடியை அனுப்புங்கள்” என தெரிவித்துள்ளார். மேலும் விமான நிலையத்தில் இருந்த விளம்பரங்களையும் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com