முதல்வர் கெஜ்ரிவாலின் இல்லத்தில் தாக்கப்பட்டாரா சுவாதி மாலிவால்? டெல்லி காவல்துறையிடம் புகார்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் தான் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி எம்பி சுவாதி மாலிவால் புகாரளித்துள்ளார்.
சுவாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்
சுவாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்pt web

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் தான் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி எம்பி சுவாதி மாலிவால் புகாரளித்துள்ளார். கெஜ்ரிவாலின் தனி உதவியாளராக இருந்த விபவ் குமார் தன்னை தாக்கியதாக புகாரளித்துள்ளார் சுவாதி. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு நேரில் சென்று டெல்லி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சுவாதி மாலிவால் இன்று இரண்டுமுறை டெல்லி காவல்துறைக்கு [PCR (police control room) தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர், இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு சென்றிருந்ததாகவும் அப்போது இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்த விபவ் குமார் தன்னை தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார்.

சுவாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்
துருவ் ரத்தி வீடியோவை பகிர்ந்த விவகாரம்... கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை!

காவல்துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க, மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என சுவாதி மாலிவாலுக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் சுவாதி, “இப்போது நான் சரியான மனநிலையில் இல்லை” எனக்கூறி மருத்துவ பரிசோதனைக்கு செல்ல மறுத்துவிட்டார். ஒரு நபர் தாக்கப்பட்டார் என்றால் அந்த நபர் தாக்கப்பட்டார் என்பதற்கான ஆதாரத்தை பதிவு செய்யும் வகையில், மருத்துவமனையில் பரிசோதனை செய்து மருத்துவர்கள் தெரிவிப்பதை காவல்துறையினர் தங்களது புகாரில் எழுதுவார்கள்.

ஆனால், தற்போது அவர் காவல்துறைக்கு தொலைபேசி மூலமாக மட்டுமே இரு முறை அளித்து புகாரளித்துள்ளார். அதனால் இதுவரை இவ்விவகாரத்தில் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய செல்லவில்லை டெல்லி காவல்துறை. அதேவேளையில் மருத்துவ பரிசோதனைக்கும் சுவாதி செல்லவில்லை.

புகார் தெரிவிக்கப்பட்டபின், சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு, முதல்வர் இல்லத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் முதல்வரின் இல்லமோ, ஆம் ஆத்மி கட்சியோ உடனடி எதிர்வினை எதுவும் தெரிவிக்கவில்லை.

சுவாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால்
தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக நினைக்கிறதா ஆம் ஆத்மி? விரிவான அலசல்...

அதேசமயத்தில் நெறிமுறைகளின்படி, டெல்லி காவல்துறையின் முன் அனுமதியின்றி முதல்வர் வீட்டிற்குள் நுழைய முடியாது. தற்போது பிசிஆர் அழைப்பின் நம்பகத்தன்மை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாதி மாலிவால், டெல்லியில் உள்ள மகளிர் உரிமைகள் அமைப்பான டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com