'குஷ்புவை போலவே எனக்கும் அந்த கொடுமை நடந்தது' - தந்தை மீது ஸ்வாதி மாலிவால் பாலியல் புகார்

'குஷ்புவை போலவே எனக்கும் அந்த கொடுமை நடந்தது' - தந்தை மீது ஸ்வாதி மாலிவால் பாலியல் புகார்
'குஷ்புவை போலவே எனக்கும் அந்த கொடுமை நடந்தது' - தந்தை மீது ஸ்வாதி மாலிவால் பாலியல் புகார்

சிறு வயதில் தந்தையால் தான் அனுபவித்த பாலியல் ரீதியான கொடுமைகள் குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் சிறுமியாக இருந்தபோது தந்தையால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கூறி அனைவரையும் அதிரவைத்தார். இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவரான ஸ்வாதி மாலிவாலும் சிறு வயதில் தனது தந்தையால் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

டெல்லியில் நேற்று மகளிர் ஆணையம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் சிறுமியாக இருந்தபோது, அவரது தந்தை அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். "நான் சிறுமியாக இருந்தபோது எனது தந்தை என்னை அடிக்கடி அடிப்பார். என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அவர் வீட்டுக்கு வரும்போது நான் பயந்துபோய் கட்டிலுக்கு அடியில் மறைந்துகொள்வேன். பயத்துடனேயே கழித்த பல இரவுகளை இன்றும் நினைவுகூர்கிறேன். இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிப்பது என்று இரவெல்லாம் யோசித்திருக்கிறேன்" என்றார் ஸ்வாதி மாலிவால்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com