’டைம்’ இதழ் வெளியிட்ட செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்!

’டைம்’ இதழ் 2024-ஆம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கும் இடம்பெற்றுள்ளார்.
சாக்‌ஷி மாலிக்
சாக்‌ஷி மாலிக்ட்விட்டர்

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ’டைம்’ இதழ் 2024-ஆம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கும் இடம்பெற்றுள்ளார். நடிகை ஆலியா பட், இந்தோ-பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல், மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த விளையாட்டில் இந்தியாவுக்காக முதல்முறையாக பதக்கம் வென்ற வீராங்கனை எனப் பெருமையை பெற்றவ,ர் சாக்‌ஷி மாலிக். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனையான இவர், கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். அதேபோல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற வீராங்கனையாகவும், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெண்கலம் வென்றுள்ளார். இளம் வீராங்கனையாக சர்வதேச அளவில் ஜொலித்த சாக்‌ஷி மாலிக், 2016இல் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா, 2017இல் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

இதையும் படிக்க: தாய்ப்பால் வேண்டாம்; சூரிய ஒளி மட்டும் போதும்’.. மனைவியை மிரட்டி 1 வயதுக் குழந்தையை கொன்ற தந்தை!

சாக்‌ஷி மாலிக்
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி.: யார் இந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்?

பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பெண் மல்யுத்த வீரர்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக சாக்‌ஷி மாலிக், வினேத் போகத், பஜ்ரங் புன்யா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் குற்றஞ்சாட்டி இருந்தனர். இதுதொடர்பாக முறையாக விசாரணை நடைபெறவில்லை என கடந்த ஆண்டு ஜனவரி முதல் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

பிரிஷ் பூஷன், சாக்‌ஷி மாலிக்
பிரிஷ் பூஷன், சாக்‌ஷி மாலிக்ட்விட்டர்

இதைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்காக நடைபெற்ற தேர்தலில், கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் வீரங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டவருமான பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். இவருடைய தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

இதையும் படிக்க: ’நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்’.. மகனுக்கான ஜெர்சியை வெளியிட்ட ஷிகர் தவான்!

சாக்‌ஷி மாலிக்
“பிரிஜ் பூஷன் சிங்கால் எனது குடும்பத்திற்கு ஆபத்து” - சாக்‌ஷி மாலிக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com