மக்களவைத் தேர்தல் - 2024 |"காமராஜரின் திட்டங்கள் எனக்கு பெரிய உந்து சக்தி" - சேலத்தில் மோடி பேச்சு!

”திமுகவின் தூக்கம் கலைந்துவிட்டது, திமுகவும் காங்கிரஸும் நாணயத்தின் இருபக்கங்கள்” என்று மோடி பேசினார்
பிரதமர் மோடி
பிரதமர் மோடிPT

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவால் திமுக காங்கிரஸ் கட்சியின் தூக்கம் தொலைந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்

சேலம் கஜல் நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

முன்னதாக பாலக்காட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சேலம் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்த மோடி திறந்தவெளி வாகனத்தில் தொண்டர்களுக்கு கையசைத்தபடி மேடைக்கு வந்தார். அவரைக்கண்டதும் தொண்டர்கள் ’மோடி மோடி’ என கோஷம் எழுப்பினர்.

NGMPC22 - 147

முன்னதாக மோடி , “பாரத் மாதாகி” என பேச்சை தொடங்கினார். ”பாரத அன்னை வாழ்க” என்று தமிழில் பேசத் தொடங்கிய அவர், ”என் அருமை தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்” எனவும் பேசினார்.

திமுகவின்தூக்கம் கலைந்துவிட்டது

”கோட்டை மாரியம்மன் குடியிருக்கும் புண்ணிய பூமியில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பலமுறை தமிழ்நாடு வந்துள்ளேன். இந்த நல்ல வாய்ப்பு மீண்டும கிடைத்துள்ளது. தமிழகத்தில் பாஜக எனக்கும் கிடைக்கும் வரும் வரவேற்பை இந்தியா முழுக்க உற்றுப் பார்க்கிறது.இதைப் பற்றித்தான் நாடு முழுக்க பேச்சாக இருக்கிறது. நேற்று கோவையில் மக்கள் கடல் போல திரண்டிருந்தார்கள். எனக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் கலைந்துவிட்டது.” என்றார்.

மேலும், “ஏப்ரல் 19-ந்தேதி ஒவ்வொரு வாக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடைக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் உறுதி செய்து விட்டார்கள். வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த தமிழ்நாடு கிடைக்க எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற, இந்தியா வளர்ச்சியடைய, விவசாயி வளர்ச்சியடைய மீனவர்கள் பாதுகாக்க தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

பிரதமர் மோடி
கோவை: பிரதமரின் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பங்கேற்பு... விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு!

இம்முறை 400க்கும் மேல் ஜூன் 4 என்று தமிழில் பேசியவர் மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தார். “வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டினை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி பூண்டுள்ளது. அதற்கேற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. டாக்டர் ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை வளர்ச்சிடையந்த தமிழ்நாட்டினை உருவாக்க உதவும். இவர்கள் இணைந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்து விட்டது.”

“40 வருடங்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து ஒரு நண்பர்..”

நான் பலமுறை சேலத்திற்கு வந்துள்ளேன். இம்முறை வந்தபோது. என்னுடைய பழைய ஞாபகங்கள் வருகிறது. 40 வருடங்களுக்கு முன்பு கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது, சேலத்தில் இருந்து ரத்தினவேல் என்ற இளைஞர் வந்திருந்தார். சேலத்தின் பல பெருமைகளை அவர் சொல்லியிருந்தார். அதன் பிறகு சேலத்தின் மீதான என் ஈர்ப்பு அதிகரித்து விட்டது. சேலத்தில் ஒரு உணவகம் நடத்தி வந்தார். அவருடைய நினைவு எனக்கு வந்துவிட்டது.

’ஆடிட்டர் ரமேஷ்..’ - கண்கலங்கிய மோடி!

சேலத்தில் மிகப் பெரிய மனிதர் கே.என்.லட்சுமணன் இருந்தார். தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சி வளர்ச்சிக்கு அவர் பெரிதும் உதவியாக இருந்தார். நெருக்கடி நிலை காலத்திலும் அவர் துடிப்போடு இருந்தார். ஆடிட்டர் ரமேஷூம் அதே ஆர்வத்துடன் கட்சிப்பணியாற்றி வந்தார். (அவரை நினைத்து கண்கலங்கிய பிரதமர் மோடி. சில நிமிடங்கள் பேச்சை நிறுத்தி விட்டு பின்னர் தண்ணீர் குடித்த பிறகு தொடர்ந்தார்).

பிரதமர் மோடி
ஏப்.19 To ஜூன் 1.. 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல்; எந்தெந்த மாநிலங்களில் எப்போது? முழுவிவரம்

ஆடிட்டர் ரமேஷ் கட்சிக்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்து உழைத்துள்ளார். கட்சிக்காக உழைத்தவரை, நேர்மையாளரை கொலை செய்து விட்டனர். (என்றதும் ஆடிட்டர் ரமேஸூக்காக அனைவரும் எழுந்து நின்று வாழ்க என்று கூறி மரியாதை செலுத்தினர்).

INDIA கூட்டணியை விமர்சித்த மோடி

தேர்தல் பிரசாரம் படுவேகமாக நாடு முழுவதும் தொடங்கி விட்டது. மும்பையில் சிவாஜி பூங்காவில் INDIA கூட்டணி கூடியது. தொடக்கத்திலேயே திமுக காங்கிரஸ் கூட்டணியின் அசல் ரூபம் வெளிப்பட்டு விட்டது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள நமக்கு அதன் சக்தி தெரியும். ஆனால் அதனை ஒழிப்பதே அவர்களின் நோக்கம். இந்து மதத்தில் சக்தியை எப்படி வழிபடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

கோட்டை மாரியம்மன், கோவிலில் ஓம்சக்தி வாசகம் எழுதப்பட்டுள்ளது. அம்மனை சக்தியின் வடிவமாக வழிபடுகிறோம். காஞ்சி காமாட்சியம்மன், மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி பகவதி அம்மன், சமயபுரம் மாரியம்மன் என சக்தி மிக்க தெய்வங்கள் பெண் வடிவில் உள்ளது. இந்து மத்த்தில் சக்தி என்பதற்கு மிகப்பெரிய வடிவம் உள்ளது. சக்தியின் வடிவத்தை, சனாதனத்தை ஒழித்து விடுவோம் என திமுக காங்கிரஸூம் சொல்வதை ஏற்க முடியாது.

”மீண்டும் மீண்டும் இந்து தர்மத்தை அவமதிக்கிறார்கள்”

INDIA கூட்டணி வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் இந்து தர்மத்தை தொடர்ந்து அவமதித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்து மதத்திற்கு எதிராக ஒரு கருத்தியலை உருவாக்கி வருகிறார்கள். ஒவ்வொரு கருத்தும் திட்டமிட்டு வருகிறார்கள். திமுக காங்கிரஸ் கூட்டணி இந்து மதத்தை விமர்சிக்கும் அளவிற்கு வேறெந்த மதத்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் இந்து மதத்திற்காக எதிராக பேசுவதை வீணடிப்பதில்லை. தமிழத்தின் பெருமையான செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவ INDIA கூட்டணி எதிர்க்கிறது. சைவ மடத்தின் அடையாளமாக உள்ளதை நிறுவ எதிர்ப்பு தெரிவித்தனர்.”

சுப்ரமணியபாரதியை மேற்கோள்காட்டிய மோடி!

தமிழகம் சுப்ரமணிய பாரதி பிறந்த மண்ணில், இந்து தர்மத்தில் சக்தியின் வழிபாட்டை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். ஏப்ரல் 19-ந்தேதி அந்த அழிவு தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்போகிறது. நீங்கள்தான் முதலில் வாக்களிக்க உள்ளனர். சுப்ரமணிய பாரதியார் சக்தியை வழிபட்டார். அவரின் வழியில் நானும் சக்தி வழிபாடு செய்கிறேன். சக்தி வழிபாட்டை அழிக்க நினைப்பவர்கள் அழிக்கப்பட வேண்டும்.

பிரதமர் மோடி
“இவர்களாக இருக்குமோ?” - மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்!

பெண்களுக்கான திட்டம் அதிகரிக்கப்படும்

நாட்டில் பெண் சக்திதியின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காணும் விதமாக நான் ஒரு பாதுகாப்பு கேடயம் போல செயல்படுகிறேன். உஜ்வாலா திட்டத்தில் இலவச இணைப்பு, மருத்துவ வசதித் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. பெண்களுக்கு உதவி செய்வதுதான் இதன் நோக்கம். தமிழ்நாட்டில் மூன்றரை கோடி பேருக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதால் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குடங்களை தூக்கிக் கொண்டு நிலையில் இருந்து பெண்கள் விடுபட்டனர். முத்ரா திட்டத்தில் பல லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. எந்த பெண் சக்திக்காக திட்டங்களை கொண்டு வந்தாமோ அவர்கள்தான் எனக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கான திட்டங்கள் இன்னும் அதிகரிக்கப்படும்.”

INDIA கூட்டணி திமகவும் காங்கிரஸூம் பெண்களை கேவலப்படுத்தி இழிவாக நடத்துகிறார்கள். இதற்கு தமிழகமே சாட்சி. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவர்களுக்கு செய்த கொடுமைகள் மூலம் திமுகவின் அசல் முகம் வெளிப்பட்டு விட்டது. பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு கூட எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது. இந்த தேர்தலில் வழங்கும் தீர்ப்பு திமுகவிற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

”2ஜி ஊழல் மூலம் உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்து விட்டனர்”

திமுகவும் காங்கிரஸூம் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக உள்ளது. ஊழல், ஒரே குடும்ப ஆட்சி, இவர்கள் அதை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதனால் தான் காங்கிரஸ் வீட்டிற்கு போன பிறகு 5 ஜி தொழில்நுட்பம் வந்த்து. தமிழ்நாட்டில் திமுக 5 ஜி, அவர்களது 5-வத தலைமுறை ஆட்சிக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் இதற்கு முன்பு 2ஜி ஊழல் மூலம் உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்து விட்டனர். அவர்களின் ஊழலை சொல்ல ஒரு நாள் போதாது. தமிழகத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் நிதியளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் இங்குள்ள அரசு அதில் எப்படி கொள்ளையடிக்கலாம் என திட்டம் போடுகிறது.

பிரதமர் மோடி
மக்களவை தேர்தல் 2024 | மீண்டும் விசிக வேட்பாளர்களாக திருமாவளவன், ரவிக்குமார்!

ஜிகே மூப்பனார் ஏன் பிரதமராகவில்லை?

தமிழகத்தின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மூப்பனாரை பிரதமராக விடாமல் காங்கிரஸ் தடுத்தது. தேசிய அரசியலில் மிகப்பெரிய தலைவராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் பிரதமராக ஆகியிருக்கலாம். ஆனால் காங்கிரஸ் குடும்ப ஆட்சி தமிழரான அவரை பிரதமர் ஆக விடாமல் தடுத்து விட்டனர்.

பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அரசியலில் நேர்மை என்பது இருந்தது. அவர் உருவாக்கி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம், உணவு வழங்கி கல்வி வளர்ச்சி திட்டம் எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்தது.

தமிழ்நாட்டில் வர இருக்கும் ஜவுளி பூங்கா...

பாரதிய ஜனதாவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் பல பெரிய கனவுகளை வைத்துள்ளது. அதை அடைந்தும் வருகிறோம். நவீன உள்கட்டமைப்பின் மூலம் மிகப்பெரிய உயரங்களை அடைந்து வருகிறோம். ஆயிரக்கணக்கான சாலைகள் மேம்பாடு, எய்ம்ஸ் மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், இந்திய தொழில்நுட்பக்கழகம் என எண்ணற்ற வளர்ச்சியை உருவாக்கி வருகிறோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டு பாதுகாப்பு தளவாட வழித்தடம் உருவாக்கி வருகிறது. அதில் ஒன்று தமிழ்நாட்டில் கொண்டு வந்துள்ளோம். நாடு முழவதும் 7 இடங்களில் அமைக்கப்படும் ஜவுளிபூங்காவில் ஒன்று தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.6 ஆயிரம் மதிப்பில் எக்கு தொழில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சேலம் உருக்காலை பயன்பெறும். ரயில்வேத் துறையின் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் தெரியுமா? - வெளியான அறிவிப்பு

”உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பினால் வலிமையான பாரதம் உருவாகும்”

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இணைந்திருக்கும் தலைவர்களை வரவேற்கிறேன். ஒரு வளர்ச்சியடைந்த தமிழ்நாடு, வலிமையான பாரதம் உருவாக்க இணைந்திருக்கும் தலைவர்களை வரவேற்கிறோம். உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பினால் வலிமையான பாரதம் உருவாகும்.

அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். அது மட்டுமல்ல, ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறோம். ஏப்ரல் 19-ம் தேதி தமிழக மக்கள் ஒரு புதிய சாதனையை தொடங்கி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெற செய்ய வேண்டும். நம்மிடம் காலத்திற்கு முந்தைய மூத்த மொழியான தமிழின் பெருமை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் நான் பெருமைப் படுகிறேன். உலகின் மிகவும் தொன்மையான மொழியை உணர்ந்தும் அதில் பேச முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழில் பேசி வருகிறேன்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com