மக்களவை தேர்தல் 2024 | மீண்டும் விசிக வேட்பாளர்களாக திருமாவளவன், ரவிக்குமார்!

திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டி இடுகின்றனர்.
விசிக வேட்பாளர்கள் -  மக்களவை தேர்தல் 2024
விசிக வேட்பாளர்கள் - மக்களவை தேர்தல் 2024புதிய தலைமுறை

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்து வருகின்றன. அதில் மார்ச் 8 ல் நடந்த திமுக, மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. தொடர்ந்து நேற்று காங்கிரஸ் உடனான திமுக-வின் ஒப்பந்தமும் தொகுதிப் பங்கீடும் கையெழுத்தானது.

திமுக - விசிக தொகுதிப்பங்கீடு
திமுக - விசிக தொகுதிப்பங்கீடுட்விட்டர்

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவையன்றி உள்ள 21 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது.

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 மக்களவைத் தொகுதிகளைக் கேட்ட நிலையில், 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதில் சிதம்பரம் தொகுதியில் தொல் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்ற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இருவருமே பானை சின்னத்தில் களமிறங்க உள்ளதாக திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியவற்றை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

வரும் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் திமுக எங்கெங்கு போட்டியிடுகின்றன; அங்கு யார் யார் போட்டியிட உள்ளனர் என்ற உத்தேச பட்டியலை அறிய...

விசிக வேட்பாளர்கள் -  மக்களவை தேர்தல் 2024
காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்; வேட்பாளர்கள் யார் யார்? உத்தேச பட்டியல் இதோ...
விசிக வேட்பாளர்கள் -  மக்களவை தேர்தல் 2024
“இவர்களாக இருக்குமோ?” - மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com