“இவர்களாக இருக்குமோ?” - மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்!

திமுக சார்பில் 21 மக்களவை தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளார்கள் பட்டியல் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் திமுக எந்தெந்த தொகுதிகளில் யார் யாரை வேட்பாளாராக நிறுத்த வாய்ப்பு உள்ளது என்ற புதியதலைமுறையின் உத்தேச பட்டியல் இதோ...
திமுக உத்தேச பட்டியல்
திமுக உத்தேச பட்டியல்PT

செய்தியாளர் - ரமேஷ்

மக்களவைத் தேர்தல் பரபரப்பு சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடுகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏன்?

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அங்கு யார் நிறுத்தப்பட வேண்டும் என்பது பற்றியும், பாமக - தேமுதிகவின் போட்டி இடங்கள் மற்றும் அங்கு நிற்போர் யார் யார் என்பது பற்றியும் திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் முடிவான பிறகு திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று கூறப்படுகிறது.

இப்போதைக்கு,

திமுக-வின் உத்தேச பட்டியல், இதோ...

வட சென்னையில் கலாநிதி வீராசாமி,

தென் சென்னை தமிழச்சி தங்க பாண்டியன்,

மத்திய சென்னை தயாநிதி மாறன்,

ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு,

காஞ்சிபுரம் செல்வம்,

அரக்கோணம் ஜெகத்ரட்சகன்,

திருவண்ணாமலை அண்ணாதுரை,

வேலூர் கதிர் ஆனந்த்,

தருமபுரி செந்தில் குமார் அல்லது ஆ. மணி,

பெரம்பலூர் அருண் நேரு,

கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி,

ஈரோடு பிரகாஷ்,

சேலம் செல்வகணபதி அல்லது பி.கே.பாபு,

நீலகிரி ஆ.ராசா,

கோவை மகேந்திரன்,

தஞ்சாவூர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அல்லது அஞ்சுகம் பூபதி,

தென்காசியில் தனுஷ்குமார் அல்லது துரை அல்லது முத்துச்செல்வி,

திருநெல்வேலி கிரகாம்பெல் அல்லது அலெக்ஸ் அப்பாவு,

தூத்துக்குடி கனிமொழி.

இவர்கள் உத்தேச பட்டியலில் இணைக்கப்பட என்ன காரணம், அரசியல் களம் என்னவாக உள்ளது என்பது பற்றி, மேல் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக கானலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com