“மத்திய அரசு அனுமதித்தால் மேகதாது” - கர்நாடக முதல்வர் சித்தராமையா... தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம்!

மத்திய அரசு அனுமதி கொடுத்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை உடனடியாக கட்டப்படும் என கர்நாகட முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை-சித்தராமையா
மேகதாது அணை-சித்தராமையாFile Image

காவிரி தொடர்பாக கர்நாடகாவுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே காலம் காலமாக மோதல் இருந்து வருகிறது. தமிழகத்தின் எதிர்ப்பையும், மீறி தற்போது மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு குழுக்களை அமைத்துள்ளது.

கர்நாடக மாநில காவிரி ஆற்றின் குறுக்கே கனகபுரா மாவட்டம் மேகேதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பெங்களூரு, மைசூர், மண்டியா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு குடிநீர் தேவைக்காகவும், 400 மெகாவாட் மின்சார உற்பத்திக்காகவும் இந்த அணை கட்டப்பட வேண்டும் என கர்நாடகா அரசு தொடர்ந்து தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்து வருகிறது. இதற்கு தமிழக அரசும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும் கர்நாடக அரசு ஏற்கனவே இதற்கான திட்ட அறிக்கைகளை தயார் செய்து அனுமதி பெற மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

மேகதாது அணை-சித்தராமையா
காலை தலைப்புச் செய்திகள் | மேகதாது அணை விவகாரம் முதல் 3 ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகிய அஸ்வின் வரை!

இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் நிதித்துறை அமைச்சரும் முதலமைச்சருமான சித்தராமையா, அம்மாநில நிதிநிலை அறிக்கை 2024-2025ஐ தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், மேகதாது பகுதியில் அணைகள் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவித்தார். இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு தனித்திட்டப்பிரிவும், இரு துணைப்பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சித்தராமையா
சித்தராமையாTwitter

மத்திய அரசு அனுமதி கொடுத்தால் உடனடியாக காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும். இத்திட்டத்தின் கீழ் மூழ்கும் நிலங்களைக் கண்டறியும் பணியும் அணைக்கட்டும் பகுதியில் உள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணிகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழக அரசும் மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க கூடாது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்தை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அணை-சித்தராமையா
“பெரும் பிரச்னைகளை தீர்த்துதான் திறந்துள்ளோம்” - கிளாம்பாக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலின்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதுகுறித்து கூறுகையில், “தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கர்நாடகா மேகதாது அணையை கட்டியே தீருவோம் என முனைப்பு காட்டுவது கண்டனத்திற்கு உரியது. நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கார்நாடகா அரசு மீறுவதை அனுமதிக்கக்கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.

வைகோ
வைகோfile

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து கூறுகையில், “தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும். மேகதாது அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com