காலை தலைப்புச் செய்திகள் | மேகதாது அணை விவகாரம் முதல் 3 ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகிய அஸ்வின் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது மேகதாது அணை விவகாரம் முதல் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியிலுருந்து விலகிய அஸ்வின் வரை பலவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • மேகதாது அணை கட்ட குழுக்களை அமைத்தது கர்நாடக அரசு. மத்திய அரசு அனுமதி கொடுத்தால் உடனடியாக அணை கட்டப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.

  • மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகவுக்கு கண்டனம் தெரிவிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

  • தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகா அரசால் அணை கட்ட முடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புதிய தலைமுறைக்கு பேட்டி.

  • கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்ட விவசாயிகளில் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயி உயிரிழப்பு

புழல் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
புழல் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
  • விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி எல்லையில் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளதால் அக்சர்தாம் - காஜிபூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது.

  • மக்களவை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை மற்றும் தி ஃபெடரல் இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தகவல்.

  • தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

  • வருமானவரி கட்டாததால் சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் கூட வழங்கமுடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வருமான வரியைச் சேமிக்கும் வழிகள்
வருமான வரியைச் சேமிக்கும் வழிகள்freepik
  • முன்னாள் அமைச்சர் செந்தில பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 20ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • அதிமுக, பாஜக தலைவர்கள் பேசியதை பார்த்தாலே கூட்டணி அமையுமா என்பது புரியும் என்று புதிய தலைமுறைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.

  • பொது விநியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பையும் விநியோகிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கவேண்டும். ஆகவே எட்டுவாரத்தில் உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

  • சென்னை மெரினா கடற்கரையில் விற்கப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை பரிசோதனை முடிவில் அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

  • கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் அதிகரிப்பதன் எதிரொலியால் கர்நாடகாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழக எல்லையில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
கர்நாடகாவில் பரவும் குரங்கு காய்ச்சல்; பாதிப்புகள் என்ன, வராமல் தடுக்கும் முன்னேற்பாடுகள் என்ன?
  • புதுச்சேரியில் கடற்கரையில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு. குழந்தையை கடத்திச் சென்ற பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • ராமரை கற்பனை கதாப்பாத்திரம் என கூறியவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்று ஹரியானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

  • டெல்லி அரசியலில் புதிய திருப்பமாக நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.. தீர்மானத்தின் மீது டெல்லி சட்டசபையில் இன்று விவாதம் நடைபெறும்.

  • இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது இன்சாட் 3DS செயற்கைக்கோள். வானிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்கும் என விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.

  • ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னியின் இறப்புக்கு அந்நாட்டு அதிபர் புதினே காரணம் எனக் கூறி போராடும் மக்கள். புதின் உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என வலியுறுத்தும் சர்வதேசத் தலைவர்கள்.

  • தாயின் உடல்நலம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகினார் அஸ்வின். குடும்பம் சார்ந்த எமெர்ஜென்சிக்காக அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை எட்டிய நிலையில் சென்னை திரும்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com