HEADLINES | தீபாவளிக்கான சிறப்புப் பேருந்துகள் முதல் இமாச்சலில் தொடங்கிய பனிப்பொழிவு வரை
243 தொகுதிகளை கொண்ட பிகார் மாநில சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல்... நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு...
பிஹார் 2 கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முறையே வரும் 10 மற்றும் 13 ஆம் தேதிகளில் தொடக்கம்... வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு...
பிஹார் சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு... மொத்தம் உள்ள 7.43 கோடி வாக்காளர்களில் 14 லட்சம் பேர் முதல் தலைமுறையினர் என தேர்தல் ஆணையம் தகவல்...
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 243 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி... முதற்கட்டமாக 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் காலணியை வீச முயன்ற விவகாரத்திற்கு வலுக்கும் கண்டனம்... சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் ராகேஷ் கிஷோருக்கு இடைக்கால தடை விதித்து பார் கவுன்சில் நடவடிக்கை...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்... ஒவ்வொரு இந்தியரையும் கோபமடையச் செய்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவு...
வரும் 16ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்... சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலிருந்து 20 ஆயிரத்து 378 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு...
சென்னையில் கிளாம்பாக்கம் உட்பட 3 இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு... ஈசிஆர் வழி செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தும், ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்திலிருந்தும் இயக்கம்...
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்... மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு தமிழக அரசு கோரிக்கை...
தமிழகத்தில் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ்... நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக ஊழியர்களுக்கு 3ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு...
வடக்கு வங்காளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்... வனப்பகுதிகள் கடுமையாகப் பாதிப்பு; சிறுத்தை, காண்டாமிருகம் உயிரிழப்பு...
தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... ஆந்திராவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், பலத்த காற்றும் வீசும் என எச்சரிக்கை...
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை.... ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்...
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அரை மணி நேர மழைக்கே தேங்கிய நீர்... சாலைகள், தெருக்களில் தேங்கிய நீரால் மக்கள் அவதி...
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை... தலைநகர் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் கணிப்பு...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்... மழைநீர் தேங்காதவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர்...
கரூர் விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுக அரசு, கிட்னி விவகாரத்தில் விசாரணையை தொடங்காதது ஏன்? ஸ்டாலின் அரசின் இரட்டைவேடம் அம்பலப்பட்டுவிட்டதாக பழனிசாமி சாடல்...
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக மன்னிப்பு கேட்க வேண்டுமென கமல்ஹாசன் வலியுறுத்தல்... தேவையின்றி செந்தில் பாலாஜி மீது குற்றஞ்சாட்டக்கூடாது எனவும் கருத்து...
திமுக, குழுக்களை அனுப்பும்போது பாஜக அனுப்பக்கூடாதா? ராகுல் மணிப்பூர் செல்லும்போது பாஜகவினர் கரூர் வரக்கூடாதா என அண்ணாமலை கேள்வி...
நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்... விதிமுறைகளை மீறினால் ஜாமீனை ரத்து செய்து, நடவடிக்கை எடுப்போம் என உச்ச நீதிமன்றம் கருத்து...
தீபாவளியை முன்னிட்டு வசூல் வேட்டை நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை... கடலூரில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்...
தமிழ்நாட்டில் மட்டும்தான் தாய்மொழியில் படிக்காமல் பட்டம் வாங்கும் மோசமான நிலை இருக்கிறது... பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்...
புரட்டாசி பௌர்ணமியையொட்டி அண்ணாமலையார் திருக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்... நிலவு ஒளியில் நமசிவாய மந்திரம் முழங்கியபடி சென்ற பக்தர்கள்...
காஷ்மீரை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்திலும் தொடங்கியது பனிப்பொழிவு... சாலைகளை பனி மூடியதால் சுற்றுலாவுக்கு வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தல்...
2025ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு... உடலின் நோய் எதிர்ப்புத்தன்மை குறித்த கண்டுபிடிப்புக்காக 3 பேருக்கும் பகிர்ந்தளிப்பு...
குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை பாதியாகக் குறைக்கும் புதிய இன்கேலர்... 45 சதவீத தாக்குதலைக் குறைக்கும் என தகவல்...
காஸாவை விட்டு வெளியேறாவிட்டால் முற்றிலும் அழித்து ஒழிக்கப்படுவீர்கள்... ஹமாஸ் குழுவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை...
எதிரிகளின் தாக்குதலை தடுப்பதோடு, உடனடியாக தண்டிக்கவும் தயாராக இருங்கள்... வடகொரிய ராணுவத்தினருக்கு அதிபர் கிம் ஜோங் உன் அறிவுறுத்தல்...
ஒவ்வொரு நாளும் உச்சத்தைத் தொடும் தங்கம் விலை... நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்து 89 ஆயிரத்துக்கு விற்பனை...
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.... நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...