\
ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வெளியில் போடும் ஊழியர்
ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வெளியில் போடும் ஊழியர்pt web

‘நீங்களே இப்படி செய்யலாமா?’ குப்பைகளை தண்டவாளத்தில் வீசிய ரயில்வே ஊழியர்.. வைரலாகும் வீடியோ

இந்திய ரயில்வே ஊழியர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளைத் தண்டவாளத்தில் வீசும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Published on: 

இந்திய ரயில்வே ஊழியர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளைத் தண்டவாளத்தில் வீசும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இன்று காலை (06/03/25) 9 மணியளவில் THE SKIN DOCTOR எனும் எக்ஸ் தள கணக்கிலிருந்து ஒரு வீடியோ வெளியாகிறது. அந்த வீடியோவில், ரயில்வே ஹவுஸ் கீப்பிங் ஊழியர் ஒருவர் குப்பைகளைப் போடுவதற்கு குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தாமல் ஓடும் ரயிலிலிருந்து அதை வெளியில் வீசுகிறார்.

இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ள THE SKIN DOCTOR எனும் கணக்கு, “ஊழியரின் செயல் வீடியோவாகப் பதிவு செய்யப்படுவதை அவரே அறிந்திருந்தார். இந்த ஆணவமும் நம்பிக்கையும் ஊழியர்களுக்கு எங்கிருந்து வருகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிகழ்வு, பிரயாக்ராஜ் அருகே உள்ள சுபேதர்கஞ்சிலிருந்து மும்பைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற 04115 ரயிலில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வெளியில் போடும் ஊழியர்
”கேம்ப்ரிட்ஜ் பல்கலை தேர்வில் தோல்வியடைந்தவர் ராஜிவ் காந்தி” - மணிசங்கர் அய்யர் சர்ச்சை பேச்சு!

கிட்டத்தட்ட 6 மணி நேரத்தில் இந்த வீடியோ 5 லட்சத்து 80 ஆயிரம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. பலரும் இந்த வீடியோவிற்குக் கீழ் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பதிவர் ஒருவர், “இது வழக்கமான நடைமுறை.. ரயில் தண்டவாளங்களை நாம் உன்னிப்பாகக் கவனித்தாலே இதை நாம் பார்க்க முடியும். தண்டவாளத்தின் இருபுறமும் 15-20 மீட்டர் வரை இதுபோன்ற தட்டுகள், ரேப்பர்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் சிதறிக்கிடக்கும். இது மிக மோசமான நிலைமை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் பாதைகளை மாசுபடுத்தியதற்காகவும், குப்பைகளை அகற்றுவதற்கு முறையற்ற செயல்களில் ஈடுபட்டதற்காகவும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சிலர், அந்த ஊழியர் தவறுதான் செய்திருக்கிறார்; ஆனால், பயணிகள் உருவாக்கும் கழிவுகளின் அளவையும், ரயில்களில் இருக்கும் குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்றும், அதற்கான கட்டமைப்பை ரயில்வே நிர்வாகம் உண்டாக்கித் தரவேண்டுமென்றும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு உதவுவதற்காகவே இருக்கும் அதிகாரப்பூர்வ கணக்கான RailwaySeva இந்த விவகாரம் தொடர்பாக கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், “இந்திய ரயில்வேயில் குப்பைகளை அகற்றுவதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன. இதை மீறியுள்ள On Board Housekeeping Service ஊழியர் நீக்கப்பட்டு அவர்மீது கடுமையான நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்கள் மற்றும் ரயில்வே வளாகத்தின் தூய்மையை உறுதி செய்ய ஊழியர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வெளியில் போடும் ஊழியர்
அமெரிக்கா போரை விரும்பினால் இறுதி வரை போராட சீனா தயார்!