அமெரிக்கா  - சீனா
அமெரிக்கா - சீனா முகநூல்

அமெரிக்கா போரை விரும்பினால் இறுதி வரை போராட சீனா தயார்!

அமெரிக்கா போரை விரும்பினால் இறுதிவரை சீனா போராடத் தயார் என்று சீனத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
Published on

அமெரிக்கா போரை விரும்பினால் சீனா இறுதி வரை போராடத் தயார் என அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் கூறியிருப்பது கவனத்தை பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா போர் செய்ய விரும்பினால் இறுதிவரை போராட பெய்ஜிங் தயாராக இருப்பதாகக் கூறி உள்ளது. "அமெரிக்கா விரும்புவது போர் என்றால், அது ஒரு வரிப் போராக இருந்தாலும் சரி, வர்த்தகப் போராக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி, நாங்கள் இறுதிவரை போராடத் தயாராக இருக்கிறோம்" என்று சீனத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க தயாரிப்புகள் மீதான சீனாவின் சராசரி வரி நாம் வசூலிப்பதை விட இரண்டு மடங்கு அதிகம் என டிரம்ப் கூறியிருந்தார்.

அமெரிக்கா  - சீனா
பிரிட்டன் | கழிவறை செல்லும் மாணவர்கள் வேகமாக வகுப்பறை திரும்ப பள்ளி நிர்வாகம் போட்ட உத்தரவு!

சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட 10 சதவீத வரிகளை டிரம்ப் 20 சதவீதமாக உயர்த்தியுள்ளார். அமெரிக்காவிற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com