“பாதிக்குமேல் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது ஓகே தான்.. ஆனா இவங்கலாம்..” - திமுக வியூகம் எப்படி?

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக போட்டியிட இருக்கும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 3 பெண்களுக்கும், 11 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
mkstalin
mkstalinpt

சூடுபிடிக்கும் மக்களவைத் தேர்தல் களம்

நாட்டின் 17வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் முதல்கட்டமான 19ம் தேதி, தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கிடையே, மார்ச் 20ம் தேதியான இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என்று இருக்க, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தேர்தலுக்கு ஒருமாத கால இடைவெளியே இருக்கும் சூழலில் முக்கிய கட்சிகள் அனைத்தும் பரப்புரையை தொடங்கிவிட்டன.

திமுக கூட்டணி முழு விவரம்!

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, 40 இடங்களில் காங்கிரஸுக்கு 10, விசிக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், முஸ்லீம் லீக், மதிமுக, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகள் போட்டியிட இருக்கும் தொகுதிகளுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்ட சூழலில், திமுக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலுக்கான வாக்குறுதிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, எம்.பி கனிமொழி பெற்றுக்கொண்டார்.

mkstalin
மதுரை - வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்ற கணவன் மரணம்... உடலை கேட்டு என 13 நாட்களாக போராடும் மனைவி!

திமுக வேட்பாளர் பட்டியல்!

அதன்படி, திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம் பின் வருமாறு,

வட சென்னை: கலாநிதி வீராசாமி

தூத்துக்குடி: கனிமொழி

தென் சென்னை: சுமதி என்கிற தமிழச்சி தங்க பாண்டியன்

மத்திய சென்னை : தயாநிதி மாறன்

காஞ்சிபுரம் (தனி) : க.செல்வம்

ஸ்ரீபெரும்பதூர்: டி.ஆர்.பாலு

அரக்கோணம்: ஜெகத்ரட்சகன்

வேலூர்: கதிர் ஆனந்த்

தர்மபுரி: அ.மணி

திருவண்ணாமலை: சி.என் அண்ணாதுரை

ஆரணி: தரணிவேந்தன்

கள்ளக்குறிச்சி: தே.மலையரசன்

சேலம்: டி.எம். செல்வகணபதி

ஈரோடு: பிரகாஷ்

நீலகிரி : ஆ. ராசா

கோவை: கணபதி ராஜ்குமார்

பொள்ளாச்சி: ஈஸ்வரசாமி

பெரம்பலூர்: அருண் நேரு

தஞ்சாவூர்: முரசொலி

தேனி: தங்க தமிழ்செல்வன்

தென்காசி: ராணி

mkstalin
சேலத்தில் பிரதமர் உரை.. பதிலடி கொடுத்த டி.ஆர்.பாலு!

11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

திமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள புதுமுகங்கள்.

தர்மபுரி: அ.மணி

ஆரணி: தரணிவேந்தன்

கள்ளக்குறிச்சி: தே. மலையரசன்

சேலம்: டி.எம். செல்வகணபதி

ஈரோடு: பிரகாஷ்

கோவை: கணபதி ராஜ்குமார்

பொள்ளாச்சி: ஈஸ்வரசாமி

பெரம்பலூர்: அருண் நேரு

தஞ்சாவூர்: முரசொலி

தேனி: தங்க தமிழ்செல்வன்

தென்காசி: ராணி

mkstalin
மக்களவை தேர்தல் 2024 | வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!

திமுகவின் அறிவிப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியனிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “திமுகவில் முன்பைப்போல புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அத்தியாவசியமானது. அதேபோல், பழையவர்களை ஓரம் கட்டும்போது, பாரபட்சமாக செயல்படக்கூடாது. 2 ஒன்றிய செயலாளர்களுக்கு இடம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. நீண்ட காலமாக எம்.பிக்களாக இருக்கும் டி.ஆர் பாலு, ஜெகத்ரட்சகன் போன்றவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவது நல்லது.

அதேபோல், 6 வாரிசுகளுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளனர். கலாநிதி, தயாநிதி, தமிழச்சி, அருண் நேரு, கதிர் ஆனந்த், கனிமொழி போன்றவர்கள் வாரிசுகள். வேட்பாளர் செல்வம் பழைய ஆளாக இருந்தாலும் அவர்கள் மீது அதிருப்தி இருக்கிறது. 50 சதவீதத்திற்கும் மேல் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது சரிதான். ஆனால், 75 சதவீதம் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்பது எனது கருத்து. இந்த முறை புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தாலும், ஏற்கனவே இருந்தவர்களில், இவர்கள் எல்லாம் தேவையில்லை என்று தேர்ந்தெடுத்து ஒதுக்கப்பட்டதே சரியல்ல என்றுதான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

mkstalin
மக்களவை தேர்தல் 2024 | திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com