மக்களவைத் தேர்தல் - 2024 |"வரலாற்று சிறப்புமிக்க தலைவர் மோடி" - பாஜக கூட்டணி தலைவர்கள் புகழாரம்

"பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நிச்சயம் பிரதமர் ஆவார்" என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் PT WEB

தமிழ்நாட்டில் வருகின்ற, ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும், ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுத் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற சாலை வாகனப் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இன்று பாலக்காடு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து, சேலம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவின், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, திமுக அரசைக் கடுமையாக விமர்சித்து பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள்,

கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
ஈரோடு: அங்கன்வாடி மையங்களில் தரமற்ற முட்டைகள்? – விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு!

"ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியின் குடும்பம்" - குஷ்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான, நடிகை குஷ்பு மேடையில், "இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். தமிழகத்தில் இருந்து அதிக எம்பிக்களை பிரதமர் மோடி எதிர்பார்க்கிறார். மோடிக்கு குடும்பம் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியின் குடும்பமாக உள்ளது. 28 பைசா பிரதமர் என்று விமர்சிக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் 2.80 லட்சம் கோடி திட்டங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் வாழும் அனைவரின் மீதும் அக்கறை பாசம் கொண்டவராகப் பிரதமர் உள்ளார். திமுக போலக் காசு கொடுத்து கூட்டம் பாரதிய ஜனதாக் கட்சி கூட்டத்திற்கு வருவதில்லை. இந்த தேர்தலில் தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறையப் பேர் செல்வார்கள்.

"தமிழகத்திற்குத் திட்டங்கள் வராமல் தடுத்தது திமுக எம்பிக்கள்" - பாரிவேந்தர்

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், "வரலாற்றுச் சிறப்புமிக்க சேலத்தில் மாநாடு நடக்கிறது. சேலம் என்னுடைய சொந்த மண். 2014 முதல் பிரதமர் மோடியும் நானும் 10 மேடைகளில் பேசியுள்ளோம். உழைப்பாளிகள் வாழ்கிற இந்த சேலத்தில் மரியாதையை என்றும் விட்டுவிடாத சேலத்தில் நடக்கிற மாநாடு பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
எதையாவது பேசுவோம் | உறுதியானது பாமக - பாஜக கூட்டணி... பின்னணி என்ன?

மக்கள் முன்னால் நிற்பது பெருமையாக இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் மாற்றம் வருமா எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றம் தமிழ்நாட்டிற்குத்தான் தேவை. மத்திய அரசுக்கு இல்லை. 10 ஆண்டுகளில் செய்த திட்டங்களால் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு இந்தியா உலக பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறது.

2024- தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்த 40 எம்பிக்களை அனுப்ப வேண்டும். இதனால்தான் அவர் பிரதமர் ஆக வேண்டும் என்பது இல்லை. ஆனால் நம்முடைய சார்பில் எம்பிக்கள் போகும் போது திட்டங்களைக் கேட்டுப் பெற முடியும்.

கடந்த 5 ஆண்டுகளில் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் திமுக எம்பிக்கள் சிறுபிள்ளைகள் போலக் கூச்சல் போட்டுத் தடுக்கிறார்கள். ஒரு நாள் பாராளுமன்றம் நடைபெற மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கில் வீணாகிறது. நமக்குத் திட்டங்கள் வரவிடாமல் தடுத்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். தமிழ்நாடு மேலும் உயர, வேலைவாய்ப்பு கிடைக்க மத்திய அரசுடன் ஒத்துப் போக வேண்டும்" என்றார்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
அதிமுக கொடி, பெயர் பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை..

"10 ஆண்டுக் கால ஆட்சியைக் குறை கூற ஒன்றுமே இல்லை" -சரத்குமார்

அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், சரத்குமார், "மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும். எதிர் கூட்டணியில் யார் தலைவர் என்றே தெரியவில்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்றே சொல்லாமல் தேர்தலைச் சந்திக்கிறார்கள். 10 ஆண்டுக் கால ஆட்சியைக் குறை கூற ஒன்றுமே இல்லை. ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. தமிழக மக்களின் மனதில் தேவையில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி விஷ விதையை விதைத்து வருகிறார்கள்" என்றார்.

"தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ரூ.900 கோடி மானியமாகக் கொடுத்தார் மோடி" -ஏ.சி. சண்முகம்

புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், " பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு என்ன கொடுத்தார் என்று கேள்வி கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ரூ.900 கோடி மானியமாகக் கொடுத்து இருக்கிறார். 72 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைக் கொடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் என்ன செய்யப் போகிறார்கள் என இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

"மூன்றாவது முறையும் மோடி பிரதமர்" - டி.டி.வி தினகரன்

அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், "பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நிச்சயம் பிரதமராவார். அதற்காகத் தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிச்சயம் பணியாற்றுவோம். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற இன்னும் ஒரு மாதம் கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
முதல்வர் படம் அகற்றம்.. நடைமுறைக்கு வந்தது மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் - கட்டுப்பாடுகள் என்ன?

"தமிழ்நாட்டின் நலன் கருதி, இந்த முடிவை எடுத்தோம்" - அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி, "பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. கடந்த 10 ஆண்டுகாலமாக பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
அமெரிக்காவில் என்னதான் நடக்கிறது!! தொடரும் இந்தியர்களின் மரணங்கள்.. இதுவரை இறந்தவர்கள் யார் யார்?

தமிழ்நாட்டில் 57 ஆண்டுக்காலம் இரண்டு கட்சிகள் ஆட்சி செய்து வருகிறார்கள். மாற்றத்தை எதிர்நோக்கி மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மகிழ்ச்சியில் இணைந்து இருக்கிறோம்.

மோடி வந்த பிறகு இன்றைக்கு உலக அளவில் இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றது. விளையாட்டுத் துறையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

இந்தியாவைக் கடந்த 10 ஆண்டுகாலமாக ஒரு தலைசிறந்த முறையில் பிரதமர் மோடி ஆட்சி செய்துள்ளார் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "இந்தியாவைக் கடந்த 10 ஆண்டுகாலமாக ஒரு தலைசிறந்த முறையில் பிரதமர் மோடி ஆட்சி செய்துள்ளார். ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை, வேறு எந்த பிரதமரும் ஆட்சி செய்யாத வகையில் மோடி செயல்பட்டுள்ளார். சிறப்பான நிர்வாகத்தைத் தந்த ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். கடந்த காலங்களில் ஆண்டு கொண்டிருந்த ஆட்சியாளர்களுக்கு மத்திய அரசு நிதி தாராளமாகக் கிடைக்கச் செய்த ஒரே பிரதமராக மோடி உள்ளார்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com