மக்களவை தேர்தல் 2024 | திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

மக்களவை தேர்தல் 2024-க்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
மக்களவை தேர்தல் 2024 | திமுக தேர்தல் அறிக்கை
மக்களவை தேர்தல் 2024 | திமுக தேர்தல் அறிக்கைபுதிய தலைமுறை

கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் என நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், I.N.D.I.A. கூட்டணித் தலைமையில் தி.மு.க தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தக் கூட்டணியில் தி.மு.க தலைமையில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.

மக்களவை தேர்தல் 2024 | திமுக தேர்தல் அறிக்கை
மக்களவை தேர்தல் 2024 | திமுக தேர்தல் அறிக்கை

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 19 மக்களவை தொகுதிகளில் திமுகவின் கூட்டணி கட்சிகளும், 21 இடங்களில் திமுக நேரிடையாகவும் போட்டியிடவுள்ளது. அந்த 21 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் 2024 | திமுக தேர்தல் அறிக்கை
மக்களவை தேர்தல் 2024 | வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திமுக! யாருக்கெல்லாம் வாய்ப்பு?

வேட்பாளர் பட்டியல் மட்டும் அல்லாது தேர்தல் அறிக்கையினையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையினை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை, இங்கே காணலாம்...

மக்களவை தேர்தல் 2024 - திமுக வாக்குறுதிகள்

  • பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.

  • மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறப்படும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.

  • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

  • ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும்.

  • ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

திமுக தேர்தல் அறிக்கை - மக்களவை தேர்தல் 2024
திமுக தேர்தல் அறிக்கை - மக்களவை தேர்தல் 2024
  • புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்.

  • நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

  • மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.

  • ஆளுநர்களுக்கு அதிக அங்கீகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 321 நீக்கப்படும்.

  • ஒன்றிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

  • தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும்.

  • உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.

மக்களவை தேர்தல் 2024 | திமுக தேர்தல் அறிக்கை
மக்களவை தேர்தல் 2024 | வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!
  • இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.

  • அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.

  • இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

  • தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

  • தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முழுமையாக அகற்றப்படும்.

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்ட நாட்கள் 100 லிருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்படும்.

  • ஒன்றிய அரசு உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்றவை தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும்.

  • பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்.

  • ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

  • மாணவர்களுக்கு ரூ. 4 இலட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

  • இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மேம்பாடு குறித்த 'சச்சார்' கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.

  • சென்னையில் 3 ஆவது ரயில் முனையம் அமைக்கப்படும்.

  • ரயில் கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும்.

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்படும்.

  • சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்.

  • ஒன்றிய அரசு அமைப்புகள் தன்னாட்சியுடன் செயல்படுவது உறுதி செய்யப்படும்.

  • ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை.

  • இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகள், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும், வட்டியும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

  • துணை வேந்தர்கள் நியமனங்களை இனி மாநில அரசுகளே மேற்கொள்ள சட்டத்திருத்தம்.

  • கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒரு ஜி.பி அளவில் கட்டணமில்லா இலவச சிம் கார்டு

  • மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இலவச வை-பை

  • எளியோர் பயணம் செய்ய ஏதுவாக விமான கட்டண நிர்ணயம்.

  • இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com