“கடிதத்தின் நோக்கம் குறித்து சந்தேகம்” - ரஞ்சனி காயத்ரி கருத்துக்கு மியூசிக் அகாடமி தலைவர் வருத்தம்

”சங்கீத கலாநிதி விருதின் தேர்வு மியூசிக் அகாடமியின் தனிச்சிறப்பு. எப்பொழுதும் தீவிரமாக கலந்தாலோசித்தப் பின்னரே தேர்வு செய்யப்படுகிறது” மியூசிக் அகாடமி தலைவர் முரளி
ரஞ்சனி காயத்ரி - டிஎம் கிருஷ்ணா
ரஞ்சனி காயத்ரி - டிஎம் கிருஷ்ணாpt web

விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை

பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் டிசம்பர் 25 ஆம் தேதி நடத்த இருந்த கச்சேரியில் இருந்தும் விலகிக்கொள்வதாக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரி தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில், “பிராமணர்கள் இனப்படுகொலையை வெளிப்படையாக ஆதரித்த, பிராமண சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் பலமுறை கேவலமான தகாத வார்த்தைகளால் அழைத்து துஷ்பிரயோகம் செய்த, சொற்பொழிவுகளில் இழிமொழியை இடைவிடாமல் பாடுபட்ட ஈவெரா போன்ற ஒரு நபரை டி எம் கிருஷ்ணா புகழ்வதை கவனிக்காமல் இருப்பது ஆபத்தானது. அற விழுமியங்களைப் புதைத்துவிட்டு மியூசிக் அகாடமியின் கச்சேரியில் கலந்து கொண்டால் நமது ஒழுக்க மீறலுக்கு ஆளாக நேரிடும்” என தெரிவித்திருந்தனர்.

‘இது பெரியார் மண்தான்’ - வலுக்கும் எதிர்ப்பு

இவர்களது இந்த கருத்துக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. பலரும் ரஞ்சனி காயத்ரி சகோதரிகளுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். எழுத்தாளரும் திமுகவின் செய்தித் தொடர்பாளருமான சல்மா, “கர்நாடக இசைப் பாடகர் ரஞ்சனி காயத்திரி என்பவர், டி எம் கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்து பாடுவதை எதிர்த்து பாடகர் T.M கிருஷ்ணா அவர்களின் தலைமையில் நடப்பதால் மியுசிக் அகாடமி விழா 2024 இல் இருந்தும் டிசம்பர் 25 இல் நடக்கும் இசைக் கச்சேரியிலிருந்து விலகிக் கொள்கிறாராம். எத்தனை ஆணவம். இது பெரியார் மண்தான்” என தெரிவித்திருந்தார்.

கடிதத்தின் பின்னுள்ள நோக்கங்கள் குறித்து சந்தேகம்

பாடகர் டி எம் கிருஷ்ணா
பாடகர் டி எம் கிருஷ்ணா

இந்நிலையில் இது தொடர்பாக மியூசிக் அகாடமியின் தலைவர் முரளி, ரஞ்சனி மற்றும் காயத்ரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “2024 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி உங்களது கடிதத்தைப் பெற்றேன். மரியாதைக்குறிய சக இசைக்கலைஞரின் மீது தேவையற்ற, அவதூறான கூற்றுகள் மற்றும் தீய தொனி உள்ளடக்கத்தால் அதிர்ச்சியுற்றேன்.

ரஞ்சனி காயத்ரி - டிஎம் கிருஷ்ணா
IPL 2024 | Rajasthan Royals | ‘விதை நான் போட்டது’ - இந்தியாவை தாங்கும் ராஜஸ்தான் படை!

1942 ஆம் ஆண்டு முதல் தி மியூசிக் அகாடமியால் வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசையின் மிக உயரிய விருது என்பதை நீங்கள் அறிவீர்கள். சங்கீத கலாநிதி விருதின் தேர்வு மியூசிக் அகாடமியின் தனிச்சிறப்பு. எப்பொழுதும் தீவிரமாக கலந்தாலோசித்தப் பின்னரே தேர்வு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு அகாடமியின் செயற்குழு டிஎம் கிருஷ்ணா, அவரது வாழ்வில் இசையில் சிறந்து விளங்கியதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்தது. எந்த ஒரு வெளிப்புற காரணிகளும் எங்களது தேர்வை பாதிக்கவில்லை. நீங்கள் எனக்கும், அகாடமிக்கும் அனுப்பிய கடிதத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளீர்கள். இது உங்கள் கடிதத்தின் பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது” என தெரிவித்துள்ளார்.

ரஞ்சனி காயத்ரி - டிஎம் கிருஷ்ணா
பெரியார், டிஎம் கிருஷ்ணா குறித்த மோசமான விமர்சனம் - பாடகர்கள் ரஞ்சனி காயத்ரிக்கு வலுக்கும் எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், “கர்நாடக இசையை உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்ற கலைஞர் T.M.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி, சங்கீத கலாநிதி விருது வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இதையொட்டிய சிலரின் அவதூறுகள் கண்டனத்திற்குரியவை. அகாடெமி அதற்கு இரையாகாமல் நிற்பது சிறப்பு. சிபிஎம் அவரோடு துணை நிற்கும்” என தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழியும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதோடு, பெரியார் குறித்த கருத்துக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார். தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாகவும், பெண்ணிய கருத்துக்களை தான் பெரியாரிய சிந்தனைகள் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com