HEADLINES| சென்னையை பாதிக்கும் வகையில் உருவாகப்போகும் புயல்கள் முதல் தமிழ்நாட்டில் SIR அறிவிப்பு வரை
புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்திகளில், மோன்தா புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழையும், சென்னையில் கனமழையும் பெய்ய வாய்ப்பு, மோன்தா புயல் தீவிரம் பெற்று மாலை அல்லது இரவில் ஆந்திராவில் கரையைக் கடக்கும், திருச்செந்தூர் உட்பட தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் என பல்வேறு செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை... மோன்தா புயல் முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு...
மோன்தா புயல் தாக்கம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை... சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யக்கூடும் என கணிப்பு...
மோன்தா புயல் தாக்கத்தால் சென்னையில் நேற்று பிற்பகல் முதலே தொடர்ந்து மழை... பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் நள்ளிரவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு...
மோன்தா புயலால் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நேற்று காலை முதல் மழை... மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை...
ஆந்திர கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வரும் மோன்தா புயல்... இன்று இரவுக்குள் தீவிரப்புயலாக மாறி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
மோன்தா புயல் தாக்கம் எதிரொலியாக ஆந்திரா கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு... முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை...
மோன்தா புயலால் ஆந்திரா, ஒடிசாவுக்கு சிவப்பு எச்சரிக்கை... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள பேரிடர் மீட்புப்படை...
ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப வானிலை மையம் அறிவுறுத்தல்... நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை...
அடுத்த இரண்டு மாதங்களில் சென்னையை பாதிக்கும் வகையில் புயல்கள் உருவாகலாம்... வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா பேட்டி...
21 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை அறிவித்தது தேர்தல் ஆணையம்... தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் முதற்கட்டமாக பணிகள் தொடக்கம்...
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் நிறுத்தம்... இனி S.I.R. மூலம் மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக தேர்தல் ஆணையம் அழைப்பு... வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நாளை ஆலோசனை...
S.I.R. நடவடிக்கை, மக்களின் வாக்குரிமையை பறித்து, பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் நடத்தும் சதி... தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டை முறியடிப்போம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு அதிமுக, பாஜக வரவேற்பு... சதி இருப்பதாக திமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் உள்ளிட்டவை எதிர்ப்பு...
திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார பெருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ, சூரபத்மனை வதம்செய்தார் முருகப் பெருமான்...
சூரனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி அரவணைத்தார் முருகன்... திருச்செந்தூர் கடற்கரையைப் பிளந்த அரோகரா கோஷம்...
அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி விழா கோலாகலம்... பக்தி பரவசத்தில் தரிசனம் செய்த பக்தர்கள்...
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அழைத்து ஆறுதல் கூறினார் தவெக தலைவர் விஜய்... அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாக உறுதி...
அரசியல் கட்சித் தலைவர்களின் சாலைவலம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்... 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை...
வடமாநிலங்களில் கோலாகமாக கொண்டாடப்பட்ட சாத் பூஜை... குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட திரெளபதி முர்மு...
பிகாரில் நாளை பரப்புரையைத் தொடங்குகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி... முஸாஃபர்பூர், தர்பங்காவில் நடைபெறும் கூட்டங்களில் தேஜஸ்வி யாதவும் பங்கேற்கிறார்...
தெருநாய்கள் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தலைமைச் செயலர்கள் ஆஜராக வேண்டும்... தமிழ்நாடு உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் வரும் 3ஆம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு...
ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மன்னர் நருஹிட்டோவுடன் சந்திப்பு... ட்ரம்ப் வருகைக்கு எதிராக தலைநகர் டோக்கியோவில் திரளானோர் வீதிகளில் பேரணி சென்று எதிர்ப்பு...
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம்... ஜப்பான் மன்னரை சந்தித்தப் பிறகு பேட்டி...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது போட்டியில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஐசியூவில் அனுமதி... உடல்நிலை சீராக இருப்பதாக பிசிசிஐ தகவல்...

