ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திலிருந்து ஓய்வுபெற்றார் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன்
ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திலிருந்து ஓய்வுபெற்றார் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன்web

விடைபெற்றார் நியூசிலாந்து லெஜண்ட் ‘சோஃபி டிவைன்’.. மிதாலி ராஜ் வாழ்த்து!

2025 மகளிர் உலகக்கோப்பை தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை பெற்றுள்ளார் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன்..
Published on
Summary

2025 மகளிர் உலகக்கோப்பை தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை பெற்றுள்ளார் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன்..

நியூசிலாந்து அணிக்காக தன்னுடைய 16 வயதில் அறிமுகமான சோஃபி டிவைன், 20 ஆண்டுகளாக தலைசிறந்த வீராங்கனையாக விளையாடிவருகிறார். கடந்தாண்டு நியூசிலாந்து அணிக்காக டி20 உலகக்கோப்பை வென்றுகொடுத்த சோஃபி, ஒருநாள் கிரிக்கெட்டில் 9 சதங்களுடன் 4279 ரன்களும், 111 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

சோஃபி டிவைன்
சோஃபி டிவைன்

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 4,000 ரன்களுக்கு மேல் அடித்து மற்றும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் நியூசிலாந்து வீராங்கனையாகவும், ஒட்டுமொத்தமாக மூன்றாவது வீராங்கனையாகவும் சாதனை படைத்துள்ளார்..

சோஃபி டிவைன்
சோஃபி டிவைன்

2025 மகளிர் உலகக்கோப்பையில் தன்னுடைய 9வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்த சோஃபி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.. டி20 வடிவத்தில் தொடர்ந்து பயணிக்கவிருக்கிறார்..

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திலிருந்து ஓய்வுபெற்றார் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன்
2023-ல் பாண்டியா, 2025-ல் பிரதிகா.. இந்தியாவை துரத்தும் காயம்.. ஆஸியை வீழ்த்துமா IND?

சோஃபி டிவைனுக்கு மிதாலி ராஜ் வாழ்த்து..

தன்னுடைய கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய சோஃபி டிவைன், தன்னுடைய 20 ஆண்டுகால பயணத்தை தோல்வியுடன் முடித்தார். தோல்விக்கு பிறகு பேசிய அவர், ”ஏமாற்றமளிக்கிறது. நான் இப்படி முடிக்க விரும்பவில்லை, நான் உயர்ந்த நிலையில் முடிக்க விரும்பினேன்” என்று விரக்தியை வெளிப்படுத்தினார்..

இந்நிலையில் சோஃபி டிவைன் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ், ”நியூசிலாந்து உடனான உங்கள் பயணம் கடின உழைப்பு, மீள்தன்மை மற்றும் தலைமைத்துவத்திற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. எதிர்வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சிறந்து விளங்குவதற்கும், நட்புறவுக்கும் ஒரு தரத்தை நீங்கள் அமைத்துள்ளீர்கள். உங்களுடைய எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திலிருந்து ஓய்வுபெற்றார் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன்
சதமடித்த ’பிரதிகா’ திடீர் காயத்தால் விலகல்.. அரையிறுதிக்கு முன்னதாக இந்தியாவிற்கு பெரிய அடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com