ஆட்சி அமைக்க தயார் நிலையில் பாஜக! நிதிஷ், சந்திரபாபுவை இழுக்க காங்கிரஸ் போடும் கணக்கு! என்ன ஆகும்?

பாஜகவுக்கு நிகராக I-N-D-I-A கூட்டணியும் போட்டிபோட்டு முன்னிலையில் இருந்து வருவதால், அக்கூட்டணியும் மத்தியில் ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ராகுல், மோடி
ராகுல், மோடிஎக்ஸ் தளம்

18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 293 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 232 இடங்களிலும் முன்னிலையில் இருந்துவருகின்றன. இந்த முறை பாஜக ஆட்சி அமைப்பதற்கே கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டியுள்ளது. சென்ற முறை போல் தனிப்பெரும்பான்மை இல்லை. இதனால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கைகள் ஓங்கி வருகின்றன.

அதேநேரத்தில், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் I-N-D-I-A கூட்டணியும் ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவாகி வருகிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 272 தொகுதிகளைப் பிடிக்கும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். அப்படிப் பார்க்கப்போனால் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை வைத்து எளிதில் ஆட்சியை அமைத்துவிட முடியும். ஆனால், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம் உருவாக வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க: நாட்டையே திரும்பி பார்க்க வைத்த உ.பி தேர்தல் முடிவுகள்; கோட்டைவிட்ட பாஜக! உற்சாகத்தில் காங். கூட்டணி

ராகுல், மோடி
ஆந்திரா | படுதோல்வி அடையும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.. மாஸாக ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்!

கடந்த இரண்டு தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பதிவுசெய்த பாஜகவே, இந்த முறை தனிப் பெரும்பான்மையைப் பிடிக்கப் போராடி வருகிறது. ஆகையால், அந்தக் கட்சியே அவர்களின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தையும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தையும் நம்பியிருக்கிறது. கிட்டத்தட்ட இவர்களுடைய ஆதரவு இருந்தால் மட்டுமே, பாஜக இந்த முறை ஆட்சியமைக்க முடியும் என்பது உறுதியாகி உள்ளது. அதனால் இவர்களும் கிங் மேக்கர்களாக உருவாகி உள்ளனர். பாஜக ஆட்சி அமைய வேண்டுமானால், இவர்கள் வைக்கும் திட்டங்களுக்கு கட்டாயம் பாஜக அடிபணிந்து போக வேண்டிய நிலையும் உருவாகலாம்.

அதேநேரத்தில், பாஜகவுக்கு நிகராக I-N-D-I-A கூட்டணியும் போட்டிபோட்டு முன்னிலையில் இருந்து வருகிறது. அக்கூட்டணி தற்போது 232 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 293 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 53 தொகுதிகள் மட்டுமே. இதில் பிற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளன. ஆக, இந்த 17 இடங்கள் மற்றும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இன்னும் சில கட்சிகளுடன் I-N-D-I-A கூட்டணி பேச்சுவார்த்தை ஆதரவைப் பெற்றால், காங்கிரஸும் மத்தியில் ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால் இப்போது முதலே சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரிடம் இரண்டு கூட்டணிகளும் பேரத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: பாஜக-க்கு குடைச்சல் கொடுக்கும் I.N.D.I.A கூட்டணி... கிங் மேக்கராக உருவான சந்திரபாபு நாயுடு! எப்படி?

ராகுல், மோடி
ஒடிசா| ஆட்சியை இழக்கிறாரா நவீன் பட்நாயக்.. அரியணை ஏற தயாராகும் பாஜக! 70 இடங்களுக்கு மேல் முன்னிலை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com