list of longest serving chief ministers in india
longest cm listx page

பவன் குமார் டு நிதிஷ் குமார் வரை.. இந்தியாவின் நீண்டகால டாப் 10 முதல்வர்கள்!

இந்தியாவில் அதிக காலம் முதல்வர் பதவியில் இருந்தவர்கள் பட்டியல் குறித்து இங்கு பார்க்கலாம்.
Published on
Summary

இந்தியாவில் அதிக காலம் முதல்வர் பதவியில் இருந்தவர்கள் பட்டியல் குறித்து இங்கு பார்க்கலாம்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆட்சியைத் தக்கவைத்துள்ள பீகார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் இன்று பதவியேற்றார். அவர் 10ஆவது முறையாக அரியணை ஏறினார். அந்த வகையில், இந்தியாவில் அதிக காலம் முதல்வர் பதவியில் இருந்தவர்கள் பட்டியலில் பவன்குமார் சாம்லிங், நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அடுத்த இடத்தை அவர் பெற உள்ளார். இதுதொடர்பான செய்தித் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

list of longest serving chief ministers in india
Pawan Chamlingx page

1. பவன் குமார் சாம்லிங்

இந்தியாவின் மிக நீண்டகாலம் முதலமைச்சர்களாகப் பணியாற்றியவர்களில் பவன் குமார் சாம்லிங் முதலிடத்தில் உள்ளார். அவர், சிக்கிம் மாநிலத்தில் 24 ஆண்டுகள், 165 நாட்கள் முதல்வராகப் பதவி வகித்துள்ளார். அவரது கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி, தொடர்ந்து ஐந்து முறை (1994, 1999, 2004, 2009 மற்றும் 2014) வெற்றி பெற்றது. இதன்மூலம் அவர், 1994 டிசம்பர் 12 முதல் 2019 மே 26 வரை பதவியில் இருந்தார்.

list of longest serving chief ministers in india
10ஆவது முறையாக முதல்வராகும் நிதிஷ் குமார்.. பீகார் அரசியலில் கடந்து வந்த பாதை!

2. நவீன் பட்நாயக்

ஒடிசாவைச் சேர்ந்த நவீன் பட்நாயக், 24 ஆண்டுகள், 99 நாட்கள் முதல்வராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர், மார்ச் 5, 2000 முதல் ஜூன் 12, 2024 வரை ஆட்சியில் இருந்தார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பட்நாயக்கின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அப்போது பாஜக 147 சட்டமன்ற இடங்களில் 78 இடங்களைப் பெற்று பெரும்பான்மையைப் பெற்றது.

list of longest serving chief ministers in india
நவீன் பட்நாயக், ஜோதி பாசுx page

3. ஜோதி பாசு

இந்திய அரசியலில் ஓர் உயர்ந்த நபராகக் கருதப்படும் ஜோதி பாசு, தொடர்ந்து 23 ஆண்டுகள், 137 நாட்கள் மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். அவர், 1977 ஜூன் 21 முதல் 2000 நவம்பர் 5 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். மேலும் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பையும் அவர் மறுத்துவிட்டார். 2010ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.

list of longest serving chief ministers in india
‘நாயகன்’ இந்த வாரம் | ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்!

4. கெகாங் அபாங்

அருணாச்சல் பிரதேசத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகள், 250 நாட்கள் முதல்வராய்ப் பதவி வகித்தவர் கெகாங் அபாங். அவர், 1980 ஜனவரி 18 முதல், 1999 ஜனவரி 19 வரையிலும், பிறகு 2003 ஆகஸ்ட் 3 முதல் 2007 ஏப்ரல் 9 வரையிலும் பதவியில் இருந்தார். கெகோங் அபாங், தனது இரண்டு நீண்ட பதவிக்காலத்தில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் பணியாற்றினார், பல தசாப்தங்களாக அருணாச்சலப் பிரதேசத்தின் அரசியல் நிலப்பரப்பை வடிவமைத்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

list of longest serving chief ministers in india
கெகாங் அபாங், லால் தன்ஹாவ்லாx page

5. லால் தன்ஹாவ்லா

மிசோரமில் 22 ஆண்டுகள், 60 நாட்கள் முதல்வராய்ப் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர், லால் தன்ஹாவ்லா. அவர் 1984-1986; 1989-1998; 2008-2018 ஆகிய ஆண்டுகளில் முதல்வராகப் பதவி வகித்துள்ளார். வடகிழக்கில் மிக நீண்ட காலம் பணியாற்றிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகவும் லால் இருந்துள்ளார்.

list of longest serving chief ministers in india
பீகார் | சபாநாயகர் பதவிக்குப் போட்டிபோடும் பாஜக - ஜேடியு.. அமைச்சரவையிலும் கட்சிகள் பேரம்!

6. வீர்பத்ர சிங்

இமாச்சல் பிரதேசத்தில் தொடர்ந்து 21 ஆண்டுகள், 13 நாட்கள் முதல்வராகப் பதவி வகித்தவர், வீர்பத்ர சிங். இவர், 1983-1990; 1993-1998; 2003-2007; 2012-2017 ஆகிய ஆண்டுகளில் முதல்வராக இருந்துள்ளார்.

list of longest serving chief ministers in india
வீர்பத்ர சிங், நிதிஷ் குமார்x page

7. நிதிஷ் குமார்

பீகாரின் மிக நீண்ட காலம் முதலமைச்சராகப் பணியாற்றிய என்ற பெருமையை நிதிஷ் குமார் பெற உள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள், அவர் பல முறை பதவி வகித்துள்ளார். 2014ஆம் ஆண்டு ஒரு வருட இடைவெளியைத் தவிர, 2005ஆம் ஆண்டு முதல் பீகாரின் முதலமைச்சராக அவர் பதவி வகித்து வருகிறார்.

இவர்களைத் தவிர திரிபுராவின் மாணிக் சர்க்கார் (19 ஆண்டுகள், 363 நாட்கள்), தமிழ்நாட்டின் மு.கருணாநிதி (18 ஆண்டுகள், 362 நாட்கள்), பஞ்சாப்பின் பிரகாஷ் சிங் பாதல் (18 ஆண்டுகள், 350 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீண்டகால முதல்வர்களாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

list of longest serving chief ministers in india
கூட்டணியிலிருந்து விலகுகிறாரா நிதிஷ் குமார்? பாட்னாவில் பரபரக்கும் அரசியல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com