’உடனே நாடு திரும்பு’ - பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் விவகாரம்| பேரனுக்கு எச்சரிக்கை விடுத்த தேவகவுடா!

"பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் தனது கோபத்திற்கு ஆளாக நேரிடும்" என தேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேவுகவுடா, பிரஜ்வல்
தேவுகவுடா, பிரஜ்வல்ட்விட்டர்

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார், தேசிய அளவிலான அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப் பதிவு செய்வதற்கு முன்னதாகவே அவர் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடகா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில், ’விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் 2 முறை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இஸ்லாமிற்கு மாறாவிட்டால், AI மூலம் ஆபாச Videoவை உருவாக்கி வெளியிடுவேன்” - பெண்ணை மிரட்டிய மர்மநபர்!

தேவுகவுடா, பிரஜ்வல்
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் மௌனம் கலைத்த பிரதமர் மோடி!

இந்த நிலையில், பிரஜவலுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். தற்போது மீண்டும் 2வது முறையாக அவர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேநேரத்தில், ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து தலைமறைவாகவே இருப்பது முன்னாள் பிரதமரும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான தேகவுடா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில்தான், "பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக நாடு திரும்ப வேண்டும்; இல்லையென்றால் எனது கோபத்திற்கு ஆளாக நேரிடும்" என தேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், “பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனே வந்து சட்டரீதியான விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்; பிரஜ்வல் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி பெறுவதே எனது முதன்மையான நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா.. மாட்டாரா?” - நம்பிக்கை வார்த்தைகள் கூறிய சிஎஸ்கே CEO!

தேவுகவுடா, பிரஜ்வல்
பாலியல் புகார்|கர்நாடக எம்.பிக்கு சம்மன்.. அவகாசம் கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com