இஸ்லாமிற்கு மாறாவிட்டால், AI மூலம் ஆபாச Videoவை உருவாக்கி வெளியிடுவேன்” - பெண்ணை மிரட்டிய மர்மநபர்!

”மதம் மாறாவிட்டால், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஆபாச வீடியோக்களை உருவாக்கி வெளியிடுவேன்” என உத்தரப்பிரதே இளைஞர் ஒருவர், போன்மூலம் பெண்ணை மிரட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
model image
model imagefreepik

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போனுக்கு, அவருக்குத் தெரியாத எண்ணிலிருந்து ‘ஹாய், ஹலோ’ என மெசேஜ் வந்துள்ளது. ஆனால், அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. இதையடுத்து, அந்த செல்போனைத் தொடர்புகொண்ட மர்ம நபர், ’உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்; அத்துடன் நீ முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டால், உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.

mobile theft
mobile theftfile image

இதைக் கேட்டதும், அந்த இணைப்பை இளம்பெண் துண்டித்துள்ளார். அதற்குப் பிறகு, கடந்த மே 19-ஆம் தேதி அதே எண்ணில் இருந்து, இளம்பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாச செய்தி மற்றும் வீடியோக்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அதையும் அந்தப் பெண் அழித்துள்ளார். இதையடுத்து மீண்டும் தொடர்புகொண்ட அந்த மர்ம நபர், ’இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால், வீட்டுக்கு வந்து கடத்தி கொலை செய்து விடுவேன்.

இதையும் படிக்க: யாஷ் தயாளைத் திட்டிய விராட்.. தோனியைப் புகழும் ரசிகர்கள்.. காரணம் இதுதான்! #ViralVideo

model image
”மெரேஜ் செய்யலனா..” - டேட்டிங் ஆப் மூலம் பழகிய பெண்ணுக்கு ஆபாச வீடியோ காட்டி மிரட்டல்.. இளைஞர் கைது

மேலும், மதம் மாறாவிட்டால், ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த இளம்பெண், தன் தந்தையிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அவர் இதுதொடர்பாக போஜிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அது போஜிபூரைச் சேர்ந்த பைசல் என்பவரது செல்போன் எண் என்பது தெரிய வந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், பைசலின் தந்தை அமீனுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க:அமெரிக்க டாலருக்கு ஆப்பு.. மாலத்தீவுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரேநேரத்தில் OK சொன்ன இந்தியா, சீனா!

model image
’lover’ பட பாணி|தினமும் 100 முறை போன் செய்த காதலி.. டார்ச்சர் தாங்க முடியாமல் போலீஸிடம் ஓடிய காதலன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com