”அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா.. மாட்டாரா?” - நம்பிக்கை வார்த்தைகள் கூறிய சிஎஸ்கே CEO!

”தோனியின் ஓய்வு குறித்து அவரே உரிய நேரத்தில் அறிவிப்பார்” என சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
தோனி, காசி விஸ்வநாதன்
தோனி, காசி விஸ்வநாதன்ட்விட்டர்

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம், தோனி ஓய்வு பற்றிய செய்திகளே வைரலாகி வருகின்றன. ஆளாளுக்கு அவர்கள் இஷ்டம்போல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆயினும், ’இன்னும் இரண்டு ஆண்டுகளாவது தோனி விளையாட வேண்டும்.. அவருக்குப் பிறகு சென்னை அணியை, அவரே நன்கு கட்டமைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

தோனி
தோனிட்விட்டர்

அப்போதுதான் அணி அதே நடையில் பயணிக்கும்’ என்பதே அவ்வணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும், சென்னை அணியும் அவர் தொடர்ந்து விளையாடுவதையே எதிர்பார்க்கிறது. அதேநேரத்தில், ’தாம் தொடர்ந்து விளையாடுவேனா அல்லது ஓய்வு பெறுவேனா’ என்பது குறித்து விரைவில் தெரிவிப்பதாக அணி நிர்வாகத்திடம் தோனி கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: யாஷ் தயாளைத் திட்டிய விராட்.. தோனியைப் புகழும் ரசிகர்கள்.. காரணம் இதுதான்! #ViralVideo

தோனி, காசி விஸ்வநாதன்
“மேட்சுல வயசாயிடுச்சுனு யாரும் பாவம் பார்க்க மாட்டாங்க..” வெளிப்படையாகப் பேசிய தோனி!

இது ஒருபக்கம் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ’தோனி தொடர்ந்து விளையாட வேண்டும்’ என்பதுதான் ஒன்றுபட்ட சென்னை ரசிகர்களின் குரலாக இருக்கிறது. இந்த நிலையில்தான், “இதுகுறித்து தோனியே உரிய நேரத்தில் அறிவிப்பார்” என சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. இதுகுறித்து மேலும் அவர், “விளையாடுவதா, வேண்டாமா என்பது குறித்து தோனிதான் முடிவு செய்ய வேண்டும்.

அவரது முடிவுக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம். உரியநேரத்தில் அவர் தன்னுடைய முடிவை அறிவிப்பார். தோனி நிச்சயம் அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். காசி விஸ்வநாதன் சொன்னதை, தோனியே சொன்னதாக நம்பி, சென்னை ரசிகர்களும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: இஸ்லாமிற்கு மாறாவிட்டால், AI மூலம் ஆபாச Videoவை உருவாக்கி வெளியிடுவேன்” - பெண்ணை மிரட்டிய மர்மநபர்!

தோனி, காசி விஸ்வநாதன்
“போட்டில தோல்வியடைஞ்சாலும் அதே அன்புதான்..” - வளர்ப்பு நாய் குறித்து தோனி சொன்ன சுவாரஸ்யம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com