HEADLINES | தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு முதல் திருப்பரங்குன்றம் விவகாரம் வரை
புடின், மோடி முன்னிலையில் இந்தியா, ரஷ்யா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து, தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என தகவல், ஜூனியர் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா அணி உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தலைப்புச் செய்திகளாகப் பார்க்க இருக்கிறோம்.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்... சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிப்பு...
சென்னை கல்வி மாவட்டத்தில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு... மழை காரணமாக கடந்த 2ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய இன்று வேலைநாள்...
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அரசு முறை விருந்தில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின்... பல தசாப்தங்களாக தொடரும் இந்தியா, ரஷ்யா உறவு மேன்மேலும் வலுவடையும் என திரெளபதி முர்மு பேச்சு...
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 2030ஆம் ஆண்டு வரையிலான பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்து... இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்தவும் இலக்கு...
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாக செயல்பட்டு வருகின்றன... பிரதமர் நரேந்திர மோடி பேச்சு...
கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரும் அணுமின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்... 6 அணு உலைகளில் ஏற்கெனவே 2இல் மின்னுற்பத்தி செய்யப்படுவதாகவும் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு...
காஷ்மீர் குங்குமப்பூ முதல் பகவத் கீதை புத்தகம் வரை... ரஷ்ய அதிபருக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பரிசு...
நாடு முழுவதும் 4ஆவது நாளாக நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து... பிற விமானங்களில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதால், விமான நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதம்...
இண்டிகோ விமான சேவை ரத்து நிகழ்வுக்கு பொது மன்னிப்புக் கோரினார் சிஇஓ பீட்டர் எல்பர்ஸ்... நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முக்கிய விதியை வாபஸ் பெற்றது விமான போக்குவரத்துக்கு இயக்குநரகம்...
இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு எதிரொலி... 4 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தது, டிஜிசிஏ...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு... அரசின் வழக்கு ஆவணங்கள் சரியாக இருந்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி பதில்...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு... மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் விசாரணை ஒத்திவைப்பு...
நாடாளுமன்றத்தில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்... மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் ஏற்க மறுப்பால் திமுக எம்.பி. க்கள் வெளிநடப்பு...
மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்... நாட்டை ஆளும் கட்சி மதரீதியான கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு...
திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம்... நீதிபதியை ஆர்எஸ்எஸுடன் தொடர்புபடுத்தி பேசுவது தவறு என்றும் பேச்சு...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசுதான் மதமோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு... உயர் நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பை அமைச்சர் ரகுபதி திரித்து பேசுவதாகவும் விமர்சனம்...
மழை, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு... 950 டன் நிவாரணப் பொருட்களுடன் செல்லும் கப்பலை கொடியசைத்து அனுப்பி வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்...
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியமைப்பதே ஜெயலலிதாவுக்கு செலுத்தும் உண்மையான புகழஞ்சலி... ஜெயலலிதாவின் நினைவுநாளில் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதி..
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி பேசியதாக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி... தனிக்கட்சி தொடங்குவதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் விளக்கம்...
சென்னையில் தவெக தலைவர் விஜயுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு... தமிழ்நாடு அரசியல் நிலவரம் தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல்...
தவெகவில் இணைந்தார் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்... திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி விஜய் பேசாமல் இருப்பது ஒருவகையில் நல்லது என பேட்டி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு, அமைதிப் பரிசை வழங்கி கவுரவித்த FIFA கால்பந்து அமைப்பு... தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்று என ட்ரம்ப் நெகிழ்ச்சி...
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை காலிறுதி தொடரில் இந்திய அணி அசத்தல் வெற்றி... பெனால்டி ஷூட் அவுட்டில் பெல்ஜியம் அணியை அரையிறுதிக்கு முன்னேற்றம்...
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி... இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில், தொடரை வெல்ல முனைப்பு...

