DDLJ, SaiAbhyankkar, Don Lee
DDLJ, SaiAbhyankkar, Don LeeTop 10 Cinema News

`Thalaivar 173'ல் சாய் அப்யங்கர்? to Sholey Uncut | இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் | Sai Abhyankkar

இன்றைய சினிமா செய்திகளில் `Thalaivar 173', ‘Tere Ishk Mein’, Sholey Uncut உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.

1. `Thalaivar 173'ல் சாய் அப்யங்கர்?

Sai Abhyankkar
Sai Abhyankkar

ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் `Thalaivar 173' படத்தின் இயக்குநர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும், ராம்குமார் பாலகிருஷ்ணன்தான் இயக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. இப்போது இந்தப் படத்திற்கு சாய் அப்யங்கர் இசை என புது தகவலும் சேர்ந்து சுற்றி வருகிறது.

2. Drive Teaser

ஆதி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள `டிரைவ்' பட டீசர் வெளியீடு. இப்படம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது.

3. ‘Tere Ishk Mein’ வசூல்...

தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான ‘Tere Ishk Mein’ படத்தின் ஒரு வார வசூல் உலக அளவில் 118.76 கோடி என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

4. Akhanda 2 Postponed

போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த படம் `Akhanda 2: Thaandavam'. இன்று வெளியாகவிருந்த இப்படம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளிப்போகிறது என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

5. Sholey Uncut 

ரமேஷ் சிப்பி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடித்து மிகப்பிரபலமான இந்திப் படம் `ஷோலே'. இப்படம் 4K தரத்தில் மெருகேற்றப்பட்டு டிசம்பர் 12ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. இதில் ஸ்பெஷல் என்ன என்றால் படத்தின் க்ளைமாக்சில் இதுவரை பார்க்காத ஒரு டெலிட்டட் சீன் இணைக்கப்பட்டுள்ளது.

6. நிவின் பாலியின் முதல் வெப்சீரிஸ்

அருண் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள முதல் வெப்சீரிஸ் `பார்மா'. இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிசம்பர் 19ம் தேதி இது ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

7. DDLJ ராஜ்–சிம்ரன்க்கு சிலை

`தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' (DDLJ) வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ராஜ்–சிம்ரன் ஜோடியின் வெண்கலச் சிலை இன்று லண்டன் லீசெஸ்டர் சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.

8. Four more Shots please Finale

அமேசான் தளத்தில் பிரபலமான இந்தி சீரிஸ் `Four more Shots please'. இதன் நாலாவது மற்றும் இறுதி சீசன் டிசம்பர் 19 வெளியாகவுள்ளது

9. Warner Bros.ஐ வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், தயாரிப்பு நிறுவனமான Warner Bros.ஐ வாங்கியுள்ளது. 

10. கொரியனில் THE EXTRACTION

TYGO
TYGO

THE EXTRACTION படத்தின் யுனிவர்சஸை விரித்து அதிலிருந்து ஒரு ஸ்பின் ஆஃப் கதை தென்கொரியாவில் நடப்பது போல TYGO படத்தை உருவாக்குகிறார்கள். இதில் ஹீரோ க்யூட் ஹல்க் DON LEE.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com