ஞானேஷ்குமார்
ஞானேஷ்குமார்முகநூல்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்!

18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் வாக்களிக்க வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்.
Published on

செய்தியாளர் ராஜீவ்

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

26 ஆவது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள அவர் வரும் 2029-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி வரை பதவியில் நீடிப்பார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தலும் ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.

ஞானேஷ்குமார்
புதிய தேர்தல் ஆணையர் நியமனம் | உச்ச நீதிமன்றத்தில் முறையீடு.. ராகுல் எதிர்வினை!

கேரள கேடரைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

rahul gandhi react on appointment of chief election commissioner
ஞானேஷ் குமார்x page

தேர்தல் ஆணையராக பதவியேற்ற பிறகு பேசிய ஞானேஷ்குமார், “தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதல் படி வாக்களிப்பது .எனவே, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எப்போதும் வாக்களிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்ட வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் இருந்தது. இப்போதும் உள்ளது; எப்போதும் இருக்கும்” என தெரிவித்தார்.

ஞானேஷ்குமார்
புதிய தேர்தல் ஆணையர் | யார் இந்த கியானேஷ் குமார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com