குஜராத்: ராஜினாமா கடிதம் அனுப்பிய பாஜக எம்.எல்.ஏ.. பேட்டியில் சொன்ன வித்தியாசமான காரணம்!

குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேதன் இனாம்தார்
கேதன் இனாம்தார்ட்விட்டர்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம் பிடித்து வருவதுடன், கட்சிகள் தீவிரமாக பரப்புரையிலும் ஈடுபட்டு வாக்குகளைச் சேகரித்து வருகின்றன. இந்த நிலையில், குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக வரலாறு காணாத வகையில் 156 இடங்களில் வென்று, 7வது முறையாக ஆட்சி அமைத்தது. அம்மாநில முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல் உள்ளார். இந்த நிலையில், அம்மாநில பாஜக எம்எல்ஏவான கேதன் இனாம்தார், திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக, சட்டப்பேரவைத் தலைவர் சங்கர் செளத்ரியிடம் கடிதம் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: அன்று இந்திரா காந்தி.. இன்று மோடி.. தேர்தல் நடத்தை விதியை மீறியதாகக் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?

கேதன் இனாம்தார்
ஆளுநர் பதவி ராஜினாமா.. மீண்டும் தேர்தலில் களமிறங்கும் தமிழிசை.. புதுச்சேரியில் போட்டியா?

இதுகுறித்து அவர், ”தாம் சிறுவயது முதலே பாஜகவில் இருக்கிறேன். ஆனால், இப்போதும் தன்னைக் கட்சி பெரிய பொருட்டாக நினைக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இதுகுறித்து தலைமைக்குத் தெரிவித்துள்ளேன். கடந்த 11 ஆண்டுகளாக நான் சாவ்லி தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறேன். ஆனால், அதைத் தாண்டி எதுவும் நடக்கவில்லை. இத்தனை காலம் நான் பாஜகவில் இருந்தபோதிலும் என்னைக் கட்சி கண்டுகொள்ளவில்லை. நான் 2020ஆம் ஆண்டிலே சொன்னதைப்போலவே சுயமரியாதையைவிடப் பெரியது எதுவுமே இல்லை. இது கேதன் இனாம்தாரின் குரல் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சித் தொண்டர்களின் குரல்.

புதிதாகக் கட்சிக்கு வருவோரை இணைத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், அவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு. புதிதாகக் கட்சியில் சேர்பவர்களைப் புறக்கணிப்பது சரியான நடைமுறை இல்லை. அப்போது நான் என்ன சொன்னேனோ, அதை நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். நான் எம்எல்ஏவாக ராஜினாமா செய்தாலும் தொடர்ந்து பாஜகவில்தான் இருப்பேன். எங்கள் தொகுதி மக்களவை வேட்பாளரான ரஞ்சன் பட் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவதை உறுதி செய்வேன். அதற்காக நான் இரவும் பகலும் நிச்சயம் உழைப்பேன். பிறகு ஏன் ராஜினாமா செய்தீர்கள் எனக் கேட்கலாம். எனது உள்ளுணர்வு ராஜினாமா செய்யச் சொன்னது. இதன் காரணமாகவே நான் ராஜினாமா செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “வழக்கு விசாரிக்கும் போதே கொண்டுவந்தது ஏன்” - CAA-க்கு எதிராக 236 மனுக்கள் - சூடிபிடித்த விசாரணை!

கேதன் இனாம்தார்
“பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல.. குஜராத் முதல்வராக இருந்த போது..” - ராகுல் விமர்சனம்

யார் இந்த கேதன் இனாம்தார்?

குஜராத் மாநிலம் சாவ்லி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 3 முறை எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேதன் இனாம்தார். இவர், முதலில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் பாஜகவில் இணைந்து 2017 மற்றும் 2022 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றார். இனாம்தார் கடந்த 2020ஆம் ஆண்டிலும் இதேபோலத்தான் ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தார்.

மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தன்னையும் தனது தொகுதியையும் புறக்கணிப்பதாகக் கூறி, அவர் ராஜினாமா செய்தார். மேலும், தன்னைப்போலவே பாஜக எம்எல்ஏக்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், அப்போது சபாநாயகர் அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ’குண்டுவைப்பவர்கள் தமிழர்களா..’ மத்திய இணை அமைச்சர் சர்ச்சை பேச்சு - தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்!

கேதன் இனாம்தார்
2 ஆண்டுகளில் 32 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைத்தது! குஜராத் அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி விவரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com