வினாத்தாள் கசிவு.. ரிசல்ட்டில் குளறுபடி? நீட் தேர்வு குறித்து அடுக்கடுக்காக எழும் குற்றச்சாட்டுகள்!

நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக கல்வியாளர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
நீட் தேர்வு
நீட் தேர்வுமுகநூல்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறப்படும் மதிப்பெண்ணை வைத்தே சேர்க்கையும் நடைபெறுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர். கடந்த மே 30-ஆம் தேதி நீட் தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி, நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் 13,16,268 பேர் தேர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் 1,52,920 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் சையத் ஆரிஃபின் யூசஃப், ஷைலஜா எஸ், ஆதித்ய குமார் பாண்டா, ஶ்ரீராம் பி, ரஜனீஷ் பி, ஜெயதி பூர்வஜா எம், ரோஹித் ஆர், சபரீசன் எஸ் ஆகியோர் முதல் ரேங்க் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நீட் தேர்வில் முதல் 100 இடங்களை பெற்றவர்களில் 67 பேர் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை எடுத்து முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இதனிடயே ஹரியானாவில் உள்ள ஒரு மையத்தில் மட்டும் 8 பேர் முதலிடம் பெற்றிருப்பது விவாதத்தை எழுப்பியுள்ளது. இதுகுறித்து, ”மெல்ல மெல்ல நீட் தேர்வு மோசடியாக மாறுகிறதா” பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் நிறைய மாணவர்கள் 718, 719 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும் கேள்விக்கு இடமளித்துள்ளது.

இதையும் படிக்க: கங்கனாவை அறைந்த விவகாரம்| பெண் காவலருக்கு கிளம்பும் ஆதரவும், எதிர்ப்பும்! விவசாயிகள் எடுத்த முடிவு!

நீட் தேர்வு
நீட் தேர்வில் மோசடியா? ஒரே மையத்தில் 8 பேர் முதலிடம்.. 718, 719 மதிப்பெண்கள் எப்படி? எழும் கேள்விகள்

இப்படி பலரும் புகார்கள் எழுப்பிய பிறகு, 'சிலருக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன' என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. ஆயினும் அது தொடர்பாகவும் கல்வியாளர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும், இவை சந்தேகங்களை எழுப்புவதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ’லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன்?’ என கேள்வியெழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர், “முதலில் நீட் தேர்வுத்தாள் கசிந்த நிலையில், தற்போது அதன் முடிவுகளிலும் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரே மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு, பலவிதமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்திFile image

மறுபுறம், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன்? நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தொடர்பான முறையான கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். இந்த முறையான புகார்களை விசாரித்து தீர்வு காண்பது அரசின் பொறுப்பு அல்லவா?” என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: முஸ்லிம் To பெளத்தம்: 4 மதங்களில் இருந்து பாஜக கூட்டணியில் 1 எம்.பி கூட இல்லை! முடிவுகள் ஓர் அலசல்!

நீட் தேர்வு
நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் - அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த தமிழக மாணவர்கள்!

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை. சமூகநீதிக்கு எதிரானவை. மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிவதன் விளைவுகளை வெளிச்சம்போட்டு காட்டும் நீட் நுழைவுத்தேர்வு, தகுதியான பகுதிகளில் மருத்துவர்கள் கிடைப்பதை பாதிக்கின்றன. இந்த நோயை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துகிறதா ’ஹமாரே பாரா’ பாலிவுட் திரைப்படம்? தடைவிதித்த கர்நாடக அரசு!

நீட் தேர்வு
குஜராத் | நீட் தேர்வில் முறைகேடு... தேர்வு மைய துணைக் கண்காளிப்பாளர் உட்பட மூவர் கைது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மீது தொடர்ச்சியாக வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் இந்நிறுவனம் நீட் தேர்வை நடத்துவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்தப் பின்னணியில் இந்த ஆண்டு தமிழகத்திலும், விரும்புகிற இதர மாநிலங்களிலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும். வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் குறித்து முறையான விசாரணை செய்து தவறிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன் File Image

இப்படி, நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், அத்தேர்வை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீட் தேர்வில் முறைகேடாக மதிப்பெண் வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததையும், பல இடங்களில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்க: ’அமெரிக்கா எங்கள் எதிரி நாடு’ - முதன்முறையாக அறிவித்த ரஷ்யா! பின்னணி இதுதான்!

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குளறுபடிகள் குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நீட் தேர்வு குறித்த பல்வேறு காரணங்களாலும், இதுபோன்ற நடைமுறை குளறுபடிகளும், அஇஅதிமுக தொடர்ச்சியாக கொண்டுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதிபடுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேலும் பல அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நீட் தேர்வு
நீட் தேர்வு| வினாத்தாள் கசிவில் உண்மையில்லை.. ஆனால்? போலீசார் விசாரணையில் புதிய தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com