நீட் தேர்வில் மோசடியா? ஒரே மையத்தில் 8 பேர் முதலிடம்.. 718, 719 மதிப்பெண்கள் எப்படி? எழும் கேள்விகள்

நீட் தேர்வில் ஹரியானாவில் உள்ள ஒரு மையத்தில் மட்டும் 8 பேர் முதலிடம் பெற்றிருப்பது விவாதத்தை எழுப்பியுள்ளது.
neet exam results
neet exam resultsx page

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறப்படும் மதிப்பெண்ணை வைத்தே சேர்க்கையும் நடைபெறுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர். கடந்த மே 30-ஆம் தேதி நீட் தேர்விற்கான விடைக்குறிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து ஜூன் 14-ஆம் தேதி, முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருந்த தருணத்தில், நேற்று இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 13,16,268 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதில் முதல் 100 இடங்களை பெற்றவர்களில் 67 பேர் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை எடுத்து முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதனிடயே ஹரியானாவில் உள்ள ஒரு மையத்தில் மட்டும் 8 பேர் முதலிடம் பெற்றிருப்பது விவாதத்தை எழுப்பியுள்ளது. இதுகுறித்து, ”மெல்ல மெல்ல நீட் தேர்வு மோசடியாக மாறுகிறதா” பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையும் படிக்க: முக்கிய கேபினேட் இலாக்காக்கள், சபாநாயகர் பதவி'..பாஜகவுக்கு சந்திரபாபு, நிதிஷ் வைக்கும் நிபந்தனைகள்!

neet exam results
நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் - அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த தமிழக மாணவர்கள்!

அதேநேரத்தில் நிறைய மாணவர்கள் 718, 719 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும் கேள்விக்கு இடமளித்துள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை, ”loss of timeக்காக கிரேஸ் மார்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சில மாணவர்கள் 718 அல்லது 719 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்” என தெரிவித்துள்ளதே தவிர, ஹரியானாவில் 8 பேர் முதலிடம் பெற்றது குறித்து தெரிவிக்கவில்லை.

தேசிய தேர்வு முகமை அளித்த விளக்கம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். “ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது. தவறான கேள்விக்கு ஒரு நெகட்டிவ் மார்க் வழங்கப்படும். எனவே இந்த குறிப்பிட்ட மதிப்பெண்கள் எடுப்பது என்பது கணிதவியல்ரீதியாக சாத்தியமே இல்லை. அந்த வகையில், யார் எவ்வளவு நேரம் இழந்தார்கள் என்று எப்படி அவர்கள் அளவிட்டார்கள்” எனக் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

நீட் நுழைவுத்தேர்வில் சென்ற ஆண்டைவிட கட்-ஆஃப் மதிப்பெண் சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வட மாநிலங்களில் அதிர்ச்சி தோல்வி.. பாஜகவின் வாக்குகளை சரித்ததா ஒற்றை யூட்யூபரின் வீடியோக்கள்?

neet exam results
நீட் தேர்வு| வினாத்தாள் கசிவில் உண்மையில்லை.. ஆனால்? போலீசார் விசாரணையில் புதிய தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com