நீட் தேர்வு| வினாத்தாள் கசிவில் உண்மையில்லை.. ஆனால்? போலீசார் விசாரணையில் புதிய தகவல்!

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளதாகவும், அதன்பேரில் சிலர் பிடிபட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு
நீட் தேர்வுட்விட்டர்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறப்படும் மதிப்பெண்ணை வைத்தே சேர்க்கையும் நடைபெறுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு நேற்று (மே 5) இந்தியா முழுவதும் நடைபெற்றது.

இந்தத் தேர்வினை சுமார் 23.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தியா முழுவதும், சுமார் 557 நகரங்களில் இந்த நீட் நுழைவுத்தேர்வானது நடைபெற்றது. இந்த நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் ரூ20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது. அந்த வகையில், நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆள் மாறாட்டம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, பாட்னாவில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த சோனு சிங் என்ற எம்பிபிஎஸ் மாணவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சாஸ்திரி நகரில் உள்ள தேர்வு மையத்தில் அபிஷேக் ராஜ் என்ற மாணவருக்குப் பதிலாக அவர் தேர்வில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர், ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு தேர்வு எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் குற்றச் செயலில் பல பேர் ஈடுபட்டிருப்பதாகவும், அதில் சிலர் பிடிபட்டிருப்பதாகவும், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: csk vs pbks| டக் அவுட் ஆன தோனி.. உற்சாகத்தில் கை தட்டிய ப்ரீத்தி ஜிந்தா.. #ViralVideo

நீட் தேர்வு
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு – தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

அதேநேரத்தில், ”வினாத்தாள்கள் கசிந்ததா இல்லையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என பாட்னா எஸ்எஸ்பி ராஜீவ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை. தேர்வு முடிவதற்கு முன்பே வலுக்கட்டாயமாக வெளியேறிய மாணவர்கள் வினாத்தாளை இணையத்தில் பரப்பினர். மாலை 4 மணியளவில்தான் வினாத்தாள் பரப்பப்பட்டது. அதற்கு முன்பே தேர்வுகள் தொடங்கிவிட்டன'' என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக காங்கிரஸின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க்கது.

இதையும் படிக்க: Fact Check|பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல்? உடன் சென்ற குடியரசுத் தலைவர்.. நடந்தது என்ன?

நீட் தேர்வு
காலை தலைப்புச் செய்திகள்: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு TO சிஎஸ்கே vs பஞ்சாப் போட்டி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com