இடைக்கால பட்ஜெட் | பல்வேறு துறையினரின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள்

இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் பல்வேறு துறையினரும், அரசின் சலுகைகளையும் ஊக்கங்களையும் எதிர்பார்த்துள்ளனர். அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
இடைக்கால பட்ஜெட் 2024
இடைக்கால பட்ஜெட் 2024புதிய தலைமுறை

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் பல்வேறு துறையினரும், அரசின் சலுகைகளையும் ஊக்கங்களையும் எதிர்பார்த்துள்ளனர். அந்தவகையில்,

விவசாயம்...

விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு வழங்கப்படும் கடன் வரம்பை 25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிரிடும் பரப்பு அதிகரிப்பது, நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாடு பெருகுவது போன்றவை நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் வேளாண் கருவிகளுக்கான மூலப்பொருட்களுக்கு வரியை குறைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்கள் அதிகம் விளையும் காலங்களில் அவை அழுகி வீணாவதை தடுக்க குளிர்பதன கிடங்குகள் ஏராளமாக தேவைப்படுவதாகவும் இவற்றை அமைப்பவர்களுக்கு சலுகைகள் தரப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன.

மின்சார வாகனங்கள்...

வாகனத்துறையில் மின் வாகனங்களே எதிர்காலத்தில் கோலோச்ச உள்ளதால் அவற்றுக்கு மானிய சலுகை திட்டங்களை நீட்டிக்கவும் அவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயர்ன் பேட்டரிகளுக்கு வரி குறைக்கவும் அத்துறை சார்ந்த நிறுவனங்கள் கோரியுள்ளன.

இடைக்கால பட்ஜெட் 2024
"25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு” - குடியரசுத்தலைவரின் உரையும் பொருளாதார நிபுணரின் கேள்வியும்!

கட்டுமானத்துறை...

விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கட்டுமானத்துறை கருதப்படுகிறது. பலரின் வாழ்வாதாரமாக திகழும் இத்துறையை ஊக்குவிக்க குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ஊக்கம், வீடுகள் வாங்குவோருக்கு வரி சலுகைகள் அதிகரிப்பு, கட்டுமான மூலப்பொருட்களுக்கு வரிக்குறைப்பு, ரியல் எஸ்டேட் துறைக்கு தொழிற்துறை அந்தஸ்து போன்ற கோரிக்கைகளை கட்டுமானத்துறையினர் முன்வைக்கின்றனர். புதிய கட்டுமானத் திட்டங்களுக்கு ஒற்றைச்சாளர முறை ஒப்புதல் நடைமுறை தேவை என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

இடைக்கால பட்ஜெட் 2024
இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்

மருத்துவத்துறை...

நவீன உலகில் மருத்துவ சேவைகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அவற்றின் தரத்தை அதிகரித்து மருத்துவ செலவுகளை குறைப்பதற்காக பிரத்யேக கொள்கைகள் தேவைப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே பெருமளவு உற்பத்தி செய்ய ஏதுவாக அவற்றுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும் தொற்று நோய் குறித்த அச்சம் இருந்துகொண்டே வரும் நிலையில் அவற்றின் பரவலை தடுப்பதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மருத்துவத்துறையினருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

இடைக்கால பட்ஜெட் 2024
முழு பட்ஜெட் Vs இடைக்கால பட்ஜெட் - வேறுபாடுகள் என்னென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com