இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்

நடப்பாண்டின் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
இடைக்கால பட்ஜெட்
இடைக்கால பட்ஜெட்புதிய தலைமுறை

நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இடைக்கால பட்ஜெட்
"25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு"- புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குடியரசுத் தலைவரின் முதல் உரை!
இடைக்கால பட்ஜெட்
”சாலை மேம்பாலங்கள் அமைக்கப்படுமா?” - நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்; எதிர்பார்ப்பில் கடலூர் மக்கள்!

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஆறாவது மத்திய பட்ஜெட் இதுவாகும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட் என்பதால், இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி விவசாயம், வரி குறைப்பு, பெண்கள், தொழில்துறையினரை கவரும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உள்ள நூலக கட்டடத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்தி முடிக்க ஒத்துழைக்குமாறு அனைத்து கட்சியினரிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com