பட்ஜெட்
பட்ஜெட்முகநூல்

முழு பட்ஜெட் Vs இடைக்கால பட்ஜெட் - வேறுபாடுகள் என்னென்ன?

இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கலாக உள்ளது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட், எந்த வகையில் முழு பட்ஜெட்டிலிருந்து மாறுபட்டது என்பதை பார்க்கலாம்.
Published on

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?

ஒரு அரசின் பதவிக்காலம் முடியும் ஆண்டில் அது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. தேர்தலுக்கு பின் அமையும் புதிய அரசு மட்டுமே முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும். அதுவரை இடைப்பட்ட சில மாதங்களுக்கு அரசின் செயல்பாடுகள் தொய்வின்றி நடைபெற தேவையான நிதியை ஒதுக்கி அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நடைமுறையே இடைக்கால பட்ஜெட்.

இடைக்கால பட்ஜெட்டிற்கும் முழு பட்ஜெட்டிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன. அவை -

1)

முழு பட்ஜெட் என்பது முழு நிதியாண்டுக்கும் பொருந்தும்.

இடைக்கால பட்ஜெட் புதிய ஆட்சி அமையும் வரையிலான இடைப்பட்ட சில மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

2)

முழு பட்ஜெட்டை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை.

ஆனால் இடைக்கால பட்ஜெட் என்பது செலவினங்களுக்கான அனுமதி கோருதல் என்பதால் அதற்கான ஒப்புதலை விவாதமே இன்றிப் பெற இயலும்.

பட்ஜெட்
நெருங்கும் தேர்தல்.. எதிர்பார்ப்பில் பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்: கவனம் ஈர்க்கும் 6 துறைகள்!

3)

முந்தைய நிதியாண்டின் வரவு, செலவு விவரங்கள், அடுத்த சில மாதங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இடைக்கால பட்ஜெட்டில் இருக்கும்.

முழு பட்ஜெட்டில் விரிவான வரவு, செலவு விவரங்களுடன் கொள்கை முடிவுகள், வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களும் இடம்பெறும்.

4) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தாக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை; சில மாதங்களுக்கு தேவையான நிதியைக் குறிப்பிட்டு அதைச் செலவிட நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றாலே போதுமானது. ஆனால் மரபின் தொடர்ச்சியாக இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முதல் பட்ஜெட்டே இடைக்கால பட்ஜெட்தான் என்பதும் ஆர் கே சண்முகம் செட்டியார் என்ற தமிழர்தான் அதைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com