விவசாயிகள் போராட்டம்: பெல்லட் துப்பாக்கிகள் பயன்பாடா? ஹரியானா காவல்துறை விளக்கம்

ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரல் சத்ருஜீத் கபூர், ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் விவசாயிகள் நிறுத்தப்பட்ட போது குறைந்தபட்ச பலமே பயன்படுத்தப்பட்டதாகவும், பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சத்ருஜீத் கபூர் - விவசாயிகள் போராட்டம்
சத்ருஜீத் கபூர் - விவசாயிகள் போராட்டம்pt web

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுடனான நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை சண்டிகரில் நேற்று இரவு (பிப்ரவரி 18) தொடங்கிய நிலையில், நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது.

விவசாய சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில், பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா, நித்யானந்த ராய் ஆகியோர் அடங்கிய மத்திய அமைச்சர்கள் குழுவும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் பங்கேற்றனர்.

அப்போது பருத்தி, பருப்பு வகைகள், மக்காச்சோளத்தை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது தொடர்பான மத்திய அரசின் 5 ஆண்டு திட்டம் குறித்த பரிந்துரைகளை முன்மொழிந்தனர். இதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சத்ருஜீத் கபூர் - விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த பஞ்சாப் கிஷான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச்செயலாளர் சர்வன் சிங் பந்தேர், “மத்திய அரசின் முன்மொழிவுகள் குறித்து வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசிப்போம். மத்திய அரசும் தங்களது பரிந்துரைகளை பரிசீலித்து நல்ல முடிவுகளை அறிவிக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடருவோம்” என தெரிவித்தார்.

இந்நிலையில் ஹரியானா காவல்துறை இயக்குநர் சத்ருஜீத் கபூர்,

ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் விவசாயிகள் நிறுத்தப்பட்ட போது குறைந்தபட்ச பலமே பயன்படுத்தப்பட்டதாகவும், பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விவசாயிகள் போராட்டத்தின் போது காவல்துறையினர் பெல்லட் துப்பாக்கிகள், கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியதில் விவசாயிகள் காயமுற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டி இருந்தனர். அவற்றிலுள்ள உலோகத்துண்டுகள் தங்கள் கண்களைத் தாக்கினால் சிலர் பார்வை இழக்கவும் நேரிடும் என்று கூறி எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

சத்ருஜீத் கபூர் - விவசாயிகள் போராட்டம்
#DelhiChalo தீவிரமான போராட்டம்.. ட்ரோன் மூலம் கண்காணிக்கும் அரசு; பட்டம்விட்டு தடுக்கும் விவசாயிகள்!

இவற்றுக்கு பதில் அளித்து ‘தி இந்து’ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள சத்ருஜீத் கபூர், “காவல்துறையின் செயல்முறையின் படி, முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டும், பின்னர் தண்ணீர் பீய்ச்சி அடித்தல், தடியடி (cane charge), இதன் பின்னரே ரப்பர் தோட்டாக்கள் 50 முதல் 60 யார்டுகள் தள்ளி இருந்து சுடப்படுகின்றன.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்முகநூல்

ரப்பர் தோட்டாக்களும் நேரடியாக சுடப்படப்படுவதில்லை. முதலில் அது தரையில் சுடப்பட்டு பின்பே அவை இலக்குகளைத் தாக்கும். பெல்லட் துப்பாக்கிகளால் ஏற்பட்ட காயங்கள் பற்றியோ செய்திகளைப் பற்றியோ செய்தித்தாள்களில் நான் பார்க்கவில்லை

போராட்டத்திற்கான எங்களது எதிர்வினைகள் ரப்பர் புல்லட் வரையே வரையறுக்கப்பட்டுள்ளது. மற்றொரு விஷயம், இங்கு வித்தியாசமான சூழல் நிலவுகிறது. போராட்டக்காரர்கள் இந்தியாவிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பிகிறார்கள். அவர்கள் தீவிர ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

விவசாயி சங்க உறுப்பினர் இதற்கு பதில் கூறுகையில், “பயங்கரவாதிகள் அல்லது எதிரிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது போல் அவர்கள் எங்களை நோக்கிச் சுடுகிறார்கள். போராட்டத்தில் இந்தியாவிற்கு எதிரான கோஷங்கள் எங்கும் எழுப்பப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு அவர்கள் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே நாங்கள் டெல்லிக்கு அணிவகுத்து செல்ல விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com