விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
விவசாயிகளின் போராட்டம்
விவசாயிகளின் போராட்டம் புதிய தலைமுறை

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் கடந்தவாரம் ஈடுபட்டனர். இந்நிலையில் விவசாயிகளுடனான நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை சண்டிகரில் நேற்று இரவு தொடங்கிய நிலையில், நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது.

விவசாய சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா, நித்யானந்த ராய் ஆகியோர் அடங்கிய மத்திய அமைச்சர்கள் குழுவும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் பங்கேற்றனர். அப்போது பருத்தி, பருப்பு வகைகள், மக்காச்சோளத்தை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது தொடர்பான மத்திய அரசின் 5 ஆண்டு திட்டம் குறித்த பரிந்துரைகளை முன்மொழிந்தனர்.

விவசாயிகளின் போராட்டம்
ரயில் நிறுத்தப் போராட்டம்; விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் பெரும் சங்கங்கள்

இதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த பஞ்சாப் கிஷான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச்செயலாளர் சர்வன் சிங் பந்தேர், "மத்திய அரசின் முன்மொழிவுகள் குறித்து வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசிப்போம்.

மத்திய அரசும் எங்களது பரிந்துரைகளை பரிசீலித்து நல்ல முடிவுகளை அறிவிக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடருவோம்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com