அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு எப்படி குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியும்?- நாதகவுக்கு கோர்ட் கேள்வி

“ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக நடைமுறையை மாற்ற முடியுமா? நாம் தமிழர் கட்சி என்பது அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருக்கும்பட்சத்தில், எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை கோர முடியும்”
seeman
seemanpt

செய்தியாளர் - நிரஞ்சன் குமார்

சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என இதுவரை நடந்த 6 தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் அவர்களுக்கு அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.

இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட இருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இந்த நிலையில், கரும்பு விவசாயி சின்னத்தை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “பல ஆண்டுகளாக பல தேர்தலில் இந்த சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிட்டு இருக்கிறோம். ஆனால், இந்த முறை புதிதாக தொடங்கப்பட்ட ஏதோ ஒரு கட்சிக்கு சின்னத்தை ஒதுக்கி இருக்கிறார்கள்” என நாம் தமிழர் கட்சியினர் வாதத்தை முன் வைத்தனர்.

“அவகாசம் இன்னும் இருக்கிறதே”

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ”கரும்பு விவசாயி சின்னம் free symbol. அதை முன் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். இதுதான் நடைமுறை, இதை எப்படி மாற்ற முடியும்? ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக நடைமுறையை மாற்ற முடியுமா? நாம் தமிழர் கட்சி என்பது அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருக்கும்பட்சத்தில், எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை கோர முடியும்” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு பதில் வாதத்தை முன்வைத்த நாம் தமிழர் கட்சி தரப்பு, “Free symbol கோருவதற்கான கால அவகாசம் இன்னமும் இருக்கிறது. ஆனால், அது முடிவதற்கு முன்பாகவே கரும்பு விவசாயி சின்னத்தை எங்களுக்கு முன்பாகவே கோரினார்கள் என்ற காரணத்திற்காக, வேறு ஒரு கட்சிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்தது சட்டவிரோதம்” என்றும் குற்றம்சாட்டியது

seeman
மதுரை: ‘மதுபோதையில் என் தந்தையுடன் தகராறு செய்வியா?’ - நண்பர்களின் உதவியோடு கொலை செய்த சிறுவன்

“முன்கூட்டியே கேட்பவர்களுக்கு முன்னுரிமை”

இதற்கு கடும் ஆட்சேபனம் தெரிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய தரப்பு, “கரும்பு விவசாயி சின்னத்தை தற்போது பெற்றிருக்கக்கூடிய கட்சி கடந்தாண்டு டிசம்பர் 17-ஆம் தேதி கேட்டிருந்தார்கள். ஆனால், நாம் தமிழர் கட்சி பிப்ரவரி 9-ம் தேதிதான் கேட்டார்கள். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பிப்ரவரி 13-ஆம் தேதி அந்த சின்னத்தை ஒதுக்கியது. இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை. Free symbol-ஐ கட்சிகள் பெறுவதற்கான காலக்கெடு தொடங்கியபோது அதனை பயன்படுத்திக் கொள்ளாதது அந்தக் கட்சியின் பிரச்னை. இதில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை அவர்கள் குறைகூற முடியாது. வேண்டுமென்றால், அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்குவங்கியை பெற்று போதுமான சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தாள் தாராளமாக நிரந்தர சின்னத்தை கேட்கட்டும் அப்பொழுது நாங்கள் அதனை அவர்களுக்கு வழங்குவோம்” என காட்டமாக பதில் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, நாதக சார்பில், “கடந்த கால தேர்தல்களிலும் இந்த சின்னத்தில் போட்டியிட்டோம் என்பதால் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நாங்கள் கேட்கிறோம்” என்று கூறினர். அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய வழக்கறிஞர்,

“இவர்கள் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்கள் என்பதற்காக, இந்த வழக்கை விசாரித்து ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட சின்னத்தை மாற்றி இந்த கட்சிக்கு நீங்கள் ஒதுக்க உத்தரவிடுவீர்களேயானால், இதுபோன்று நூற்றுக்கணக்கான கட்சிகள் சின்னம் கோரி நீதிமன்றத்தை நாடி வந்து விடுவார்கள். அது நடைமுறை சிக்கலை ஏற்படுத்திவிடும்” என்று வாதிட்டார்.

“எப்படி சட்டவிரோதம் ஆகும்?”

மேலும், “கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த சின்னத்தை முன்னதாகவே இவர்கள் கோரினார்கள். அதை இவர்களுக்கு நாங்கள் வழங்கினோம் அப்போது, அது சட்டவிரோதமல்ல. தற்போது 2024-ஆம் ஆண்டு தாமதமாக சின்னத்தை கேட்டார்கள். அதனால் நாங்கள் வழங்கவில்லை. இதனை சட்டவிரோதம் என்றுகூறி, ஏன் இப்படி மாற்று நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி எடுக்கிறது” என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, குறைந்தபட்சம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்குவதற்கு பரிசீலனை செய்யவாவது உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு, “அப்படி அறிவுறுத்தல் வழங்குவதுகூட சிரமமான காரியம்” என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான உத்தரவு எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

seeman
போலி நகைகளை கொடுத்து ஒரிஜினல் தங்கத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பல் கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com