போலி நகைகளை கொடுத்து ஒரிஜினல் தங்கத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பல் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில் போலி நகைகளை கொடுத்து, ஒரிஜினல் தங்க நகைகளை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட 3 வட மாநில பெண் திருடர்களை திருமங்கலம் போலீசார் கைது செய்து, தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
கைதான பெண்கள்
கைதான பெண்கள்PT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் சோமு ஜுவல்லர்ஸ் என்ற பிரபல தனியார் தங்க நகைக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்கு, கடந்த 27-ஆம் தேதி அன்று ஒரு கைக்குழந்தையுடன் சென்ற 3 பெண்கள், தாங்கள் அணிந்திருந்த தங்க செயின்கள் அறுந்துவிட்டதால், அதற்கு மாறாக புதிய செயின் எடுத்துக்கொள்கின்றோம் என்று நகை வாங்கியுள்ளனர். அப்போது, தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுத்து, அதற்கு மாறாக 10 சவரன் தங்க நகைகளை மாற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, சம்பவம் நடந்த மறுநாள் கடையில் இருந்தவர்கள் நகைகளை பரிசோதனை செய்துள்ளனர். அப்போதுதான், தங்க நகை என்று கொடுத்துவிட்டுச் சென்ற நகை போலியானது என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, கடையில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில், கண்ணமங்கலம் போலீசில் சோமு ஜுவல்லர்ஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. நகைக் கடைக்குச் சென்று சிசிடிவி காட்சிகளை எல்லாம் ஆய்வு செய்த போலீஸார், மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் குறித்து அருகில் இருக்கும் காவல் நிலையம் மற்றும் தங்க நகைக் கடைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

கைதான பெண்கள்
"இந்தியாவுக்காக ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம்.."- இஷான் & ஸ்ரேயாஸை விளாசிய கவாஸ்கர்?

தொடர்ந்து, இன்று வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில், அதே மூன்று பெண்கள் கைக்குழந்தையுடன், அதே பாணியில் போலி நகைகளை கொடுத்து ஒரிஜினல் தங்க நகைகளை மாற்ற முயற்சித்துள்ளனர். அப்போது சுதாரித்துக் கொண்ட நகைக்கடை உரிமையாளர், பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ஒரிஜினல் தங்க நகை மற்றும் போலி நகை செயின்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ஆரணி பகுதிகளில் தங்க நகைக் கடைகளில் போலி நகைகளை கொடுத்து, ஒரிஜினல் தங்க நகைகளை மோசடி செய்யும் வடமாநில பெண்கள் குறித்த தகவல்கள் அனைத்து நகைக்கடைகளுக்கும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கைதான பெண்கள்
மதுரை: ‘மதுபோதையில் என் தந்தையுடன் தகராறு செய்வியா?’ - நண்பர்களின் உதவியோடு கொலை செய்த சிறுவன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com