மதுரை: ‘மதுபோதையில் என் தந்தையுடன் தகராறு செய்வியா?’ - நண்பர்களின் உதவியோடு கொலை செய்த சிறுவன்

தன் தந்தையிடம் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறு செய்தவரை, சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ரமேஷ்
கொலை செய்யப்பட்ட ரமேஷ்pt desk

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை மேல் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் ரமேஷ் (38). கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்த இவர், மது அருந்திவிட்டு அப்பகுதியில் செல்வோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கொலை
கொலை புதிய தலைமுறை

அப்படி நேற்றிரவு ரமேஷ் வழக்கம் போல் மது அருந்திவிட்டு விற்பனை நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் (17) என்ற சிறுவனின் தந்தையின் காலில் கல்லை போட்டு படுகாயப்படுத்தியுள்ளார் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது.

arrest
arrestfile

இதில் ஆத்திரமடைந்த சிறுவன் துரைராஜ், தனது நண்பர்களான காமராஜபுரத்தை சேர்ந்த ராஜசேகரன் (17), பகவதி (18), பள்ளம் பகுதியை சேர்ந்த மீனாட்சி (16), சதீஷ்குமார் (16) ஆகியோருடன் சேர்ந்து சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களால் ரமேஷை கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிவகங்கையில் பதுங்கி இருந்த 5 பேரையும் தெப்பக்குளம் சிறப்பு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை செய்யப்பட்ட ரமேஷ்
சென்னை டூ மதுரை: பொதிகை ரயிலில் கடத்திவரப்பட்ட ரூ.90 கோடி மதிப்பிலான 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

மது அருந்திவிட்டு தந்தையிடம் தகராறு செய்தவரை சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com